Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நிலம்.. நீர்.. காற்று.. முக்கியமா பணம் – அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது சிக்மா படத்தின் டீசர்

SIGMA Movie Tamil Teaser | நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சிக்மா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

நிலம்.. நீர்.. காற்று.. முக்கியமா பணம் – அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது சிக்மா படத்தின் டீசர்
சிக்மாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Dec 2025 18:47 PM IST

சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் தொடர்ந்து அறிமுகம் ஆகி வருவது வழக்கமாக உள்ளது. இது சினிமா கலாச்சாரம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் முன்னணி நடிகர்களின் மகன்கள் நடிகர்களாகவும் இயக்குநர்களின் மகன்கள் இயக்குநர்கள் என அடுத்தடுத்த தலைமுறையினர் சினிமாவில் வந்துகொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் முன்னதாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் பாடல் ஒன்றில் விஜயுடன் இணைந்து நடனம் ஆடி இருந்தார். சிறு வயதிலேயே நடத்தில் தனது தந்தையுடன் ஜேசன் சஞ்சய் கலக்கி இருப்பார். இதனைத் தொடர்ந்து வெளி நாட்டிற்கு எல்லாம் என்று சினிமா தொடர்பான படிப்புகளைப் தேர்வு செய்து படித்த ஜேசன் சஞ்சய் தமிழ் நாட்டிற்கு வந்த பிறகு நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

ஆனால் அவர் நடிப்பு துறையை தேர்வு செய்யாமல் இயக்குநராக தமிழ் சினிமாவில் தற்போது காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை மட்டும் இன்றி மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்தப் படத்திற்கு சிக்மா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது சிக்மா படத்தின் டீசர்:

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ள நிலையில் இவருடன் இணைந்து ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்புதாசன், யோக் ஜபே, மகலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தை லைகா புரடெக்‌ஷன் சார்பாக தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்துள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவாகியுள்ள இந்த சிக்மா படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… Racing isn’t acting’.. அஜித் குமாரின் கார் ரேஸ் ஆவணப்படத்தின் டீஸர் வெளியானது!

சிக்மா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் பார்வதியின் முகத்திரையை கிழித்த திவ்யா… வைரலாகும் வீடியோ