பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? படக்குழு கொடுத்த அப்டேட்
Parasakthi Movie Audio launch Update: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பராசக்தி. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து படக்குழு தற்போது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மதராஸி. இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கி இருந்தார். விமர்சன ரீதியாக படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையேப் பெற்று இருந்தாலும் தொடர்ந்து படம் வசூலில் ரூபாய் 100 கோடியை கடந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்கள் ரூபாய் 100 கோடிகளை வசூலித்ததால் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பராசக்தி. இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆகாஸ் பாஸ்கரன் தயாரித்து உள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். இந்தப் படம் இவரது இசையில் வெளியாகும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




பராசக்தி படத்தின் இசை வெளியீட்ட்டு விழா எப்போது?
படத்தின் வெளியீடு முன்னதாக 14-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது வெளியீட்டு தேதியை முன்னதாக மாற்றி 10-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டே வெளியாகும் என்று அறிவித்து இருந்தது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான அப்டேட் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ரிலீஸ் தேதியை உறுதி செய்த பராசக்தி படக்குழு… உற்சாகத்தில் ரசிகர்கள்
பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Next Audio Launch 😁 update 🔥 #Parasakthi #ParasakthiPongal #ParasakthiAudioLaunch #Sivakarthikeyan pic.twitter.com/YxRxeJ5WWc
— Parasakthi (@ParasakthiMovie) December 23, 2025
Also Read… மெய்யழகன் பட கதையை அந்த இரு நடிகர்களை மனதில் வைத்து எழுதினேன்- இயக்குநர் சி.பிரேம் குமார்!