Sivakarthikeyan: நான் ரொம்பவே எமோஷனலான நபர்தான்.. எனக்கும் அது நிச்சயம் இருக்கும்- சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம்!
Sivakarthikeyan About His True Personality: தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்துவரும் கதாநாயகனாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையிலிருந்து, வெள்ளித்திரைக்கு நுழைந்தவர் என்று தமிழ் சினிமாவில் உள்ள அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் தனது சுய குணம் குறித்து முன்பு ஒரு நேர்காணலில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளிப்படையாக பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நாயகன்தான் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவர் ஆரம்பத்தில் தமிழில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றிவந்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றிய இவர், தனது நண்பரும், இயக்குநருமான அட்லீயின் (Atlee) இயக்கத்தில் “முகப்புத்தகம்” என்ற குறும்படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். இந்த படத்தை அடுத்ததாக இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraj) இயக்கத்தில் மெரினா (Merina) என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகனாக நுழைந்தார். இவரின் நடிப்பிற்கும் மற்றும் நகைச்சுவருக்கும் நிறைய ரசிகர்கள் இவரால் ஈர்க்கப்பட்டிருந்தனர். இதனை தொடர்ந்து தனுஷின் (Dhanush) 3 என்ற படத்தில் அவருக்கு நண்பனாக நடித்து பிரபலமானார். இதையும் தொடர்ந்து தனுஷின் தயாரிப்பிலும் படங்களில் நடித்த ஹிட் கொடுத்திருந்தார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 23 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது.
அதிலும் இறுதியாக வெளியான திரைப்படம் மதராஸி (Madharaasi). இதை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த நிலையி;ல்ல, ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் தற்போது இவர் பிரம்மாண்ட இயக்குநர்களுடன் கைகோர்த்துவருகிறார். இந்நிலையில் முன்பும் ஒரு நேர்காணல் பேசிய சிவகார்த்திகேயன், தனது குணம் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தில் ரஜினியை அழகாக பயன்படுத்தியிருக்கார் நெல்சன் – சிவராஜ்குமார்
தனது குணம் குறித்து மனம் திறந்த சிவகார்த்திகேயன் :
அந்த நேர்காணலில் தொகுப்பாளர் சிவகார்த்திகேயனிடம், நீங்கள் எப்போதுமே ஜாலியான நபரா ? என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித சிவகார்த்திகேயன், “இல்லை நான் மிகவும் எமோஷனலான நபரும் கூட, எவ்வளவு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனோ, அவ்வோ நான் மிகவும் எமோஷனல். நான் எவ்வளவு சிரிக்கிறேனோ அதற்கு, மாறாக மிகவும் அமைதியாகிவிடுவேன்.
இதையும் படிங்க: 2025ல் திருமணம் செய்துகொண்ட தமிழ் பிரபலங்கள் யார் யார்?
ரொம்ப கஷ்டப்பட்டால், ரொம்பவே பீல் பண்ணுவேன். மேலும் எனக்கு தெரிந்த நபர்கள் என்னை கஷ்டப்பட்டுதா முயன்றால் அதை மிகவும் கஷ்டமாக நான் பார்ப்பேன். மேலும் நான் உண்மையிலே அப்படி பட்ட நபர் என்று கென்டர்கள் என்றால், மிகவும் சீரியஸான நபர் என நான் கூறுவேன்” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
பராசக்தி படம் குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
#NamakkanaKaalam – https://t.co/DFuELQDTpv 😊👍#JanjaraJanjaraja (Telugu) – https://t.co/dTri3HA6fK #Parasakthi #ParasakthiFromJan14 pic.twitter.com/FF0ppiucsS
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 14, 2025
சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாக தயாராகியிருப்பதுதான் பராசக்தி படம் . இதை இயக்குநர் சுதா கொங்கரா இயக்க, டான் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. இதில் சிவகார்த்திகேயனுடன் ஸ்ரீலீலா ஜோடியாக நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியில் வெளியாகிற நிலையில், ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.