Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sivakarthikeyan: பராசக்தி படம் வீரம், புரட்சி, காதலை பேசும்.. பொங்கலுக்கு நல்ல கொண்டாட்ட படமாக இருக்கும் – சிவகார்த்திகேயன் பேச்சு!

Sivakarthikeyan About Parasakthi Movie: கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் வளர்ந்துவரும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் வரும் 2026ம் ஆண்டில் பொங்கலுக்கு வெளியாகும் படம்தான் பராசக்தி. இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பான எக்சிபிஷன் இன்று சென்னையில் தொடங்கிய நிலையில், அந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் பராசக்தி படம் குறித்து பேசியுள்ளார்.

Sivakarthikeyan: பராசக்தி படம் வீரம், புரட்சி, காதலை பேசும்.. பொங்கலுக்கு நல்ல கொண்டாட்ட படமாக இருக்கும் – சிவகார்த்திகேயன் பேச்சு!
சிவகார்த்திகேயன் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 18 Dec 2025 20:02 PM IST

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) நடிப்பில் 25வது படமாக தயாராகியுள்ளதுதான் பராசக்தி (Parasakthi). இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்க, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படம் ஆரம்பத்தில் SK25 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் இப்படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, ரவி மோகன் (ravi Mohan) வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பின் ரவி மோகன் வில்லன் வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் நடிகர்கள் அதர்வா (Adharvaa), ஸ்ரீலீலா (Sreeleela) உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் (GV. Prakash) இசையமைத்திருக்கிறார். இது இவரின் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று 2025 டிசம்பர் 18ம் தேதி முதல் பராசக்தி திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது.

அந்த வகையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படம் தொடர்பான எக்சிபிஷனை படக்குழு இன்று (2025 டிசம்பர் 18ம் தேதி) தொடங்கியுள்ளது. “World Of Parasakthi” என்ற நிகழ்ச்சியுடன் இது ஆரம்பமான நிலையில், இதில் சிவகார்த்திகேயன் உட்பட படக்குழு அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். இதில் பேசிய சிவகார்த்திகேயன் பராசக்தி படம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரு பேரே வரலாறு… வெளியானது தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட 2வது பாடல்!

பராசக்தி படம் பற்றி சிவகார்த்திகேயன் பேச்சு :

அந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “இந்த World Of Parasakthi உங்கள் அனைவரையும் 1960களுக்கு கூட்டி செல்லும் என நினைக்கிறேன். இதை செய்வதற்காக படக்குழு கடும் பாடுபட்டிருக்கின்றனர். இந்த படத்தின் 2:30 மணி நேரம் உங்களை 60களுக்கு கொண்டு செல்லும். இந்த படம் முக்கியமாக ஒரு பிரச்னையை பற்றி பேசும், அது கூடவே காதல், பாசம், வீரம் மற்றும் புரட்சி என எல்லாமே பேசும் படமாக இருக்கும்.

இதையும் படிங்க: நடிகை நிதி அகர்வாலிடம் கூட்டத்தில் அத்துமீரிய ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ

இந்த பொங்கலுக்கு பராசக்தி படம் ஒரு செலபிரேஷனாக இருக்கும். கண்டிப்பாக திரையரங்கு சென்று பாருங்க. மேலும் வள்ளுவர்கோட்டத்தில் இருக்கும் World Of Parasakthi-யையும் நேரம் இருக்கும்போது வந்து பாருங்க” என அவர் அதில் பேசியிருந்தார்.

World Of Parasakthi நிகழ்ச்சி குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் 10 நிமிட காட்சிகள் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் இந்த் 10 நிமிட வீடியோ இணையதளங்களில் வெளியிடப்படாதாம். இந்த வீடியோவை World Of Parasakthi எக்சிபிஷனில் படக்குழு வெளியிடுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இருக்கும் World Of Parasakthi எக்சிபிஷனில்தான் இந்த வீடியோ திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.