இந்த பாடலைப் பாடியது உங்கள் தளபதி விஜய்… ஜன நாயகன் படத்தின் 3-வது சிங்கிள் குறித்த அப்டேட் இதோ
Jana Nayagan Movie : நடிகர் தளபதி விஜய் நடிப்பில் தற்போது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் மூன்றாவது சிங்கிள் வீடியோ எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
கோலிவுட் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்துள்ளார். இது நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் இறுதிப் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. இந்த ஜன நாயகன் படத்தை இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ளார். முன்னதாக இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்பிக்கை வைத்துள்ளனர். தொடர்ந்து இந்தப் படத்தின் அறிவிப்பிற்கு பிறகு படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் யார் என்பது குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தினை பிரல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்ஷன் தயாரித்து உள்ளது. இந்த நிறுவனம் தமிழ் சினிமாவில் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தின் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது மூன்றாவது சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




ஜன நாயகன் படத்தின் 3-வது சிங்கிள் குறித்த அப்டேட் இதோ:
இந்த ஜன நாயகன் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள நிலையில் முன்னதாக இரண்டு பாடல்கள் இந்தப் படத்தில் இருந்து வெளியாகி இருந்தது. இந்த நிலையில் மூன்றாவது சிங்கிளான செல்ல மகளே என்ற பாடல் வருகின்ற 26-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாக உள்ளது. இந்தப் பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Also Read… ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியானது மைசா படத்தின் கிளிம்ஸ் வீடியோ!
ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Mass zone paathachu, Melody zone povoma? 😉
Indha paadalai paadiyathu ungal THALAPATHY VIJAY 💥
Lyrics by @Lyricist_Vivek 🧨#ChellaMagaleFromDec26 🥰#JanaNayaganThirdSingle#JanaNayagan#JanaNayaganPongal#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay @KvnProductions… pic.twitter.com/DT93Wj0g3Q
— KVN Productions (@KvnProductions) December 25, 2025
Also Read… சண்டை இல்லாம இருக்கவே மாட்டாங்க போல… பிக்பாஸில் அமித் மற்றும் வினோத் இடையே வெடித்த சண்டை