Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Arun Vijay: தளபதிக்கு என் ஆதரவு இருக்கும்… ஜன நாயகன் படத்திற்காக வெயிட்டிங்- அருண் விஜய் பேச்சு!

Arun Vijay About Thalapathy Vijay: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் அருண் விஜய். இவரின் நடிப்பில் ரெட்ட தல படமானது வரும் 2025 டிசம்பர் 25ம் தேதியில் வெளியாகிறது. அந்த வகையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இவர், தளபதி விஜயின் ஜன நாயகன் படத்திற்காக வெயிட்டிங் என கூறியுள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

Arun Vijay: தளபதிக்கு என் ஆதரவு இருக்கும்… ஜன நாயகன் படத்திற்காக வெயிட்டிங்- அருண் விஜய் பேச்சு!
அருண் விஜய் மற்றும் தளபதி விஜய்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 23 Dec 2025 16:25 PM IST

நடிகர் அருண் விஜயின் (Arun Vijay) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் 3வது படமாக வெளியீட்டிற்கு காத்திருப்பது ரெட்ட தல (Retta Thala). இப்படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன்(Kirish Thirukumaran) இயக்க, பி.டி.ஜி.யுனிவர்சல் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் அருண் விஜய் ரெட்டை வேடத்தில் நடிக்க, அவருடன் நடிகர்கள் சித்தி இத்னானி (Siddhi Idnani), தான்யா ரவிச்சந்திரன், பாலாஜி முருகதாஸ். ஜான் விஜய் உடன்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படமானது வரும் 2025 டிசம்பர் 25ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் (Sam CS) இசையமைக்க பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அருண் விஜய், “தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) ஜன நாயகன் (Jana Nayagan) படத்திற்காக வெயிட்டிங் என்றும், அவருக்கு எப்போதும் நம்முடைய ஆதரவு இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது தளபதி ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ரிலீஸிற்கு முன்பே சிறை பட இயக்குநருக்கு கார் பரிசு.. தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்! 

தளபதி விஜய் குறித்து அருண் விஜய் பேசிய விஷயம் :

அந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அருண் விஜய், “தளபதியின் ஜன நாயகன் திரைப்படத்திற்காக வெயிட்ங். இது விஜய் சாரின் கடைசி திரைப்படம் என்ற நிலையில், எனக்கும் கஷ்டமாக இருக்கிறது. என்றைக்கும் அவருக்கு நம்முடைய ஆதரவு இருக்கும்” என தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: இந்திய மாணவர்கள் அனைவரும் பராசக்திதான்.. அவர்களால் எதையும் சாதிக்க முடியும் – சுதா கொங்கரா பேச்சு!

மேலும் அஜித் குமார் குறித்தும் பேசினார். “எனக்கு நடிகர் அஜித் குமாரின் உறுதி தன்மை ரொம்பவே பிடிக்கும். சரியான வாய்ப்பு கிடைத்தாலே அவருடன் நிச்சயமாக படத்தில் நடிப்பேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

ரெட்ட தல திரைப்படம் குறித்து அருண் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

நடிகர் அருண் விஜய்யின் முன்னணி நடிப்பில் வெளியாக காத்திருக்கும் படம்மான ரெட்ட தல. இந்த படமானது அதிரடி கேங்ஸ்டர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. மேலும் எதிர்பாராத டுவிஸ்ட் என முற்றிலும் மாறுபட்ட கதையில் இப்படம் தயாராகியுள்ளது. இடத்தி ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தரச் சான்றிதழை சென்சார் குழு கொடுத்துள்ளது. அந்த விதத்தில் இப்படத்தை 1 முதல் 16 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.