ப்ரீ ரிலீஸ் பிசினசில் தெறிக்கவிடும் ஜன நாயகன்… முதல் நாள் மட்டுமே இத்தனை கோடி வசூலிக்குமா?
Jana Nayagan Movie Pre Release Sales: நடிகர் விஜய் நடிப்பில் தற்போது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் சேல்ஸ் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் உள்ள ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து உள்ளார். இது நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசிப் படம் என்பதால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப் படுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் இனி படங்களில் நடிப்பதில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் ஜன நாயகன் படம் தான் இறுதி என்று தெரிவித்துள்ளனர். இந்த செய்தி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் படத்தின் மீது அவர்களுக்கு எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் வருகின்ற 27-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.




ப்ரீ ரிலீஸ் பிசினசில் தெறிக்கவிடும் ஜன நாயகன்:
இந்த நிலையில் படம் வருகின்ற ஜனவரி மாதம் 09-ம் தேதி 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் படத்தின் முதல் நாள் வசூல் ரூபாய் 100 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது.
Also Read… 2025-ம் ஆண்டில் பெற்றோர்களான பிரபலங்கள் யார் யார்? லிஸ்ட் இதோ
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#JanaNayagan — First Day’s Box-office Collection 100Crs+ is Possible….❓
What will this film collect on the first Day….? pic.twitter.com/AWlinLoJ2a
— Movie Tamil (@_MovieTamil) December 22, 2025
Also Read… பொலிட்டிகள் காமெடி பாணியில் வெளியான இந்த ரகு தாத்தா படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ