Jana Nayagan: அரசியல் நிகழ்ச்சியல்ல தளபதி திருவிழா இசைவெளியீட்டு விழா.. அதிரடி எச்சரிக்கை கொடுத்த மலேசிய போலீஸ்!
Jana Nayagan Audio launch Warning: தமிழில் உச்ச நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் தளபதி விஜய். இவரின் கட்சி திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் ஜன நாயகன். இந்த படத்தின் ஓசை வெளியீட்டு விழா மலேசியாவில் உள்ள தேசிய விளையாட்டு மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், இந்நிகழ்ச்சி குறித்து மேலசிய போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் விஜய் (Vijay) தற்போது முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கியுள்ளார். அந்த வகையில் இவரின் நடிப்பில் சினிமாவில் இறுதி திரைப்படமாக தயாராகிவருவதுதான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க, இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு, வலிமை போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படத்தையும் இவர் இயக்கியுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். மேலும் இதில் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju), நரேன், பிரியாமணி, பாபிதியோல் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் விஜய்யின் கடைசி படம் என்ற நிலையில், இந்த படத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் மிக பிரம்மாண்டமாக நடைக்காரவுள்ளது.
அந்த வகையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா “தளபதி திருவிழா” (Thalapathy Thiruvizha) என்ற பெயரை வரும் 2025 டிசம்பர் 27ம் தேதியில் மலேசியாவில் (Malaysia) உள்ள தேசிய விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இதனை காண்பதற்கு மலேசியாவிற்கு விஜய் ரசிகர்கள் படையெடுத்து செல்கின்றனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்கு மலேசிய போலீஸ் (Malaysian Police) கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.




இதையும் படிங்க: படப்பிடிப்பை முடித்தது தனுஷின் D 54 படக்குழு… வைரலாகும் போஸ்ட்
தளபதி திருவிழா நிகழ்ச்சிக்கு எச்சரிக்கை விடுத்த மலேசிய போலீஸ்:
“இந்த நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அனுமதியானது வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டுமே, மாறாக இது அரசியல் நிகழ்ச்சியாக மாறுவதற்கு அல்ல. அதன்படி இந்நிகழ்ச்சியில் அரசியல் சின்னங்கள், கொடிகள், கோஷங்கள் மற்றும் அதுகுறித்த பேச்சுக்கள் எதுவும் இருக்கக்கூடாது என கூறியுள்ளது.
இதையும் படிங்க: அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் ரீ-ரிலீஸாகும் மங்காத்தா.. வைரலாகும் பதிவு!
மேலும் இந்த நிகழ்ச்சியின்போது ஏதேனும் அரசியல் தொடர்பான விஷயங்கள் இருந்தால் உடனடியாக கடும் எச்சரிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எந்த சர்ச்சையும் இல்லாமல் நிகழ்வு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வோம்” என்றும் மலேசிய போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
தளபதி திருவிழா குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :
A live tribute concert celebrating the man, the music & the memories we grew up with ❤️
📍Bukit Jalil Stadium, Kuala Lumpur, Malaysia
See you on Dec 27, 2025 ❤️@malikstreams
Travel Partner @gtholidays_ pic.twitter.com/tkSrkLtoRH
— KVN Productions (@KvnProductions) November 23, 2025
இந்த தளபதி திருவிழாவில் கிட்டத்தட்ட தளபதி விஜய்யின் 33 வருடத்தில் நடித்த படங்களில் உள்ள ஹிட் பாடல்கள் பாடப்படவுள்ளதாம். இந்த நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட 5 முதல் 7 மணிநேரம் வரை நடைபெறும் என்று கூப்படுகிறது. இப்படம் தளபதி விஜய்க்கு சினிமாவிலிருந்து விடைக் கொடுக்கும் ஒரு நிகழ்ச்சியாகவே நடைபெறவுள்ளது. இதில் தமிழ் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.