விரைவில் வெளியாகும் சூர்யா 47 பட புரோமோ… வைரலாகும் போட்டோ
Suriya 47 Movie Promo: நடிகர் சூர்யா நடிப்பில் தொடர்ந்து படங்கள் உருவாகி வெளியீட்டிற்காக வரிசையாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் 47-வது படத்தின் புரோமோ ஷூட் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஆவேஷம். நடிகர் ஃபகத் பாசில் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இயக்குநர் ஜித்து மாதவன் ஆவேஷம் படத்தை எழுதி இயக்கி இருந்தார். மலையாள சினிமாவில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஜித்து மாதவன் மலையாள சினிமாவில் அடுத்ததாக எந்த நடிகரை இயக்குவார் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் மலையாள சினிமாவை விட்டுவிட்டு கோலிவுட் சினிமாவில் உள்ள நடிகரை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
அதன்படி நடிகர் சூர்யாவின் 47-வது படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்க உள்ளதாக முன்பு தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஜித்து மாதவன் மற்றும் சூர்யாவின் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதன்படி சூர்யா தனது 46-வது படத்திற்காக தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் வெங்கி அட்லூரி உடன் இணைந்த நிலையில் தற்போது தனது 47-வது படத்திற்காக மலையாள சினிமாவில் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஜித்து மாதவனுடன் கூட்டணி வைத்துள்ளார்.




விரைவில் வெளியாகும் சூர்யா 47 பட புரோமோ:
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூர்யா 47 படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதில் நடிகர் சூர்யா உடன் நஸ்ரியா மற்றும் நஸ்லேன் ஆகியோர் இருந்த நிலையில் இவர்கள் இருவரும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் படத்தை நடிகர் சூர்யா புதிதாக தொடங்கிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்து வருகின்ற நிலையில் சூர்யா 47 படத்தின் புரோமோ ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த ஷூட்டிங்கின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… 2025-ம் ஆண்டில் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்களின் லிஸ்ட் இதோ
இணையத்தில் கவனம் பெறும் சூர்யா 47 படத்தின் ஷூட்டிங் போட்டோ:
#Suriya47 Final promo shoot happening at #Kochi@Suriya_offl pic.twitter.com/VtKwhnIY7F
— Ananthü suriya (@AnanthuSuriya) December 20, 2025
Also Read… வீக்கெண்டில் வீட்லேயே ஜாலியா ஒரு படம் பார்க்கனுமா? இந்த நெய்மர் படத்தை மிஸ் செய்யாமல் பாருங்க