வீக்கெண்டில் வீட்லேயே ஜாலியா ஒரு படம் பார்க்கனுமா? இந்த நெய்மர் படத்தை மிஸ் செய்யாமல் பாருங்க
Neymar Movie OTT Update: மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற கமெடி படம் நெய்மர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல ஓடிடியில் வெளியான பிறகு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் தொடர்ந்து எந்த ஜானரில் படம் வெளியானாலும் தொடர்ந்து படங்கள் ரசிகர்கைடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த மலையாள சினிமாவில் காமெடி ஜானரில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் நெய்மர். காமெடி ஜானரில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் சுதி மேடிசன் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் மேத்யூ தாமஸ், நாஸ்லென், யோக் ஜபே, ஷம்மி திலகன், விஜயராகவன், ஜானி ஆண்டனி, கௌரி கிருஷ்ணா, கீர்த்தனா ஸ்ரீகுமார், தேவா நந்தா, சஜின் கோபு, ரேஷ்மி போபன், ரிஷிகாந்த், மனு வாசுதேவ், மனோஜ் பீட்ஸ், துஷாரா பில்லா, அமலா ரோஸ் குரியன், அரவிந்த் பத்ம உதய், அஜிதா நம்பியார் ஆகியோ இணைந்து முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வி சினிமாஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பக தயரிப்பாளர் பத்மா உதய் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read… இயக்குநராக ஆவதுதான் என் லட்சியம், பிழைப்புக்காகத்தான் நடிகரானேன் – பேசில் ஜோசஃப்




நெய்மர் படத்தின் கதை என்ன?
மேத்யூ தாமஸ் மற்றும் நஸ்லேன் இருவரும் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ்களாக இருக்கிறார்கள். இதில் மேத்யூவின் காதலுக்கு அவரது நண்பர் நஸ்லேன் தொடர்ந்து உதவி வருகிறார். அப்படி இருக்கும் நிலையில் மேத்யூ காதலிக்கும் பெண்ணை இம்ப்ரஸ் செய்வதற்காக நெய்மர் என்ற நாயை வளர்க்க வாங்கி வருகிறார். ஆனால் போக போக அந்த நாய் மீது மேத்யூ அதிக பாசம் வைக்கிறார். இப்படி இருக்கும் சூழலில் அந்த நெய்மர் என்ற நாய் அதிக சேட்டை செய்வதால் மேத்யூவின் தந்தை அந்த நாயை இரவோடு இரவாக குப்பை வண்டியில் ஏற்றிவிடுகிறார். இதனைத் தொடர்ந்து இந்த நாயை மேத்யூ மற்றும் நஸ்லேன் இருவரும் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.