லெவன் படத்தை ரசிகர்கள் தியேட்டரில் அதிகம் பார்த்து இருந்தால் மகிழ்ந்து இருப்பேன் – நடிகர் நவீன் சந்திரா
Actor Naveen Chandra: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நவீன் சந்த்ரா. இவர் அவ்வபோது தமிழ் சினிமாவிலும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றி இணையஹ்ட்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான சம்பவாமி யுவே யுவே என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் நவீன் சந்திரா. இவரது நடிப்பில் தெலுங்கு மொழியில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் தெலிங்கு சினிமா ரசிகரக்ளிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழி ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இவர் தொடர்ந்து தெலுங்கு மொழிகளில் படங்களில் நடித்து வந்ததது போலே தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். அதன்படி கடந்த 2007-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தமிழிலும் அவ்வபோது படங்களில் நடித்து வருகிறார் நடிகர் நவீன் சந்திரா. இந்த நிலையில் இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் நவீன் சந்திரா நடிப்பில் இதுவரை 6 படங்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்துள்ளார். தொடர்ந்து நாயகனாக மட்டும் இன்றி சின்ன சின்ன வேடங்களிலும் வில்லன் வேடங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடிகர் நவீன் சந்திரா நடிப்பில் வெளியான படம் லெவன். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் கடந்த 16-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் அஜிஸ் எழுதி இயக்கி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றதைவிட ஓடிடியில் அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
லெவன் படத்தை ரசிகர்கள் தியேட்டரில் அதிகம் பார்த்து இருந்தால் மகிழ்ந்து இருப்பேன்:
இந்த நிலையில் படம் குறித்து நவீன் சந்திரா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் அவர் பேசியதாவது, ‘லெவன்’ திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் இன்னும் அதிகமாகப் பார்த்திருந்தால் நான் இன்னும் மகிழ்ச்சியடைந்திருப்பேன். ஓடிடி-யில் இவ்வளவு பெரிய வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை. என்னை விட, ரசிகர்கள் கதைக்கு அதிக பாராட்டு தெரிவித்தனர். ரசிகர்கள் எங்கள் படத்தை திரையரங்குகளில் பார்த்தால், எங்களுக்கு ஒரு புதிய சந்தை உருவாகும் என்று அவர் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… துல்கர் சல்மானின் ஐம் கேம் படத்தில் இணைந்த நடிகை கயடு லோஹர்
இணையத்தில் கவனம் ஈர்க்கும் நவீன் சந்திரா பேசிய வீடியோ:
“I would be more happy if audience have watched #Eleven movie more in theatres🤞. I didn’t expect this much response in OTT. More than me, audience appreciated script. If audience watch our film in theatres, new market will open for us🤝”
– #NaveenChandrapic.twitter.com/57sZofEh1C— AmuthaBharathi (@CinemaWithAB) December 18, 2025
Also Read… நடிகை நிதி அகர்வாலிடம் கூட்டத்தில் அத்துமீரிய ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ



