இயக்குநராக ஆவதுதான் என் லட்சியம், பிழைப்புக்காகத்தான் நடிகரானேன் – பேசில் ஜோசஃப்
Basil Joseph: மலையாள சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருபவர் பேசில் ஜோசஃப். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து நடிப்பில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் பேசில் ஜோசஃப் அளித்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மலையாள சினிமாவில் இயக்குநர், நடிகர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் வினீத் ஸ்ரீநிவாசன். இவரிடம் 2013-ம் ஆண்டு முதல் உதவி இயக்குநராக பணியாற்றினார் பேசில் ஜோசஃப். அதனைத் தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான படம் குஞ்சிராமாயணம். இந்தப் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் பேசில் ஜோசஃப். தொடர்ந்து இயக்குநராக 2017-ம் ஆண்டு கோதா என்ற படத்தையும் 2021-ம் ஆண்டு வெளியான மின்னல் முரளி என்ற படத்தையும் மலையாள சினிமாவில் இயக்கினார் பேசில் ஜோசஃப். அதன்படி இவரது இயக்கத்தில் வெளியான மூன்று படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதில் இறுதியாக வெளியான மின்னல் முரளி படம் உலக அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த மின்னல் முரளி படத்திற்காக பேசில் ஜோசஃபிற்கு பல நாடுகளில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இயக்குநராக பேசில் ஜோசஃப் குறைவான படங்களை இயக்கி இருந்தாலும் பலப் படங்களில் நடித்துள்ளர். அதன்படி உதவி இயக்குநராக பணியாற்றி வரும் போதே அவ்வபோது சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் பேசில் ஜோசஃப் தொடர்ந்து கதையின் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இந்த நிலையில் தற்போது இவர் தொடர்ந்து நடிக்கும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் பேசில் ஜோசஃப் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலகி வருகின்றது.
இயக்குநராக ஆவதுதான் என் லட்சியம், பிழைப்புக்காகத்தான் நடிகரானேன்:
அந்தப் பேட்டியில் பேசில் ஜோசஃப் கூறியதாவது, இயக்குநராக ஆவதுதான் என் லட்சியம், பிழைப்புக்காகத்தான் தற்செயலாக நடிகரானேன். ஒரு இயக்குநராக இருந்தால், நிலையான வருமானம் பெறுவது மிகவும் கடினம், மேலும் நடிகர்களின் தேதிக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆரம்பத்தில் நான் கதாநாயகனின் நண்பர் கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகராகத் தொடங்கினேன். பிறகு கதாநாயகன் வேடத்திற்கு மாறினேன் என்று பேசில் ஜோசஃப் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பராசக்தி ஒரு அரசியல் படம் மட்டுமல்ல – இயக்குநர் சுதா கொங்கரா
இணையத்தில் கவனம் பெறும் பேசில் ஜோசஃப் பேச்சு:
“Being a director was my aspiration, actor was just accidental for survival🎬. Being a Dir, it’s very tough to have stable income & have to wait for Actor’s date😄. First i started as Hero’s Friend comedian role. Then shifted to lead role🌟”
– #BasilJosephpic.twitter.com/1TfOfKtfpi— AmuthaBharathi (@CinemaWithAB) December 18, 2025
Also Read… சூர்யா 46 படப்பிடிப்பு தளத்தில் சூர்யா செய்த நெகிழ்ச்சி செயல் – வைரலாகும் வீடியோ



