நஸ்லேனின் ஜர்னி ஆஃப் லவ் 18+ படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்
Journey of Love 18+ Movie Update: நடிகர் நஸ்லேன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் ஜர்னி ஆஃப் லவ் 18+. இந்தப் படம் எந்த ஓடிடியில் பார்க்கலாம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது இந்த செய்தியில் பார்க்கலாம்.
மலையாள சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார் நடிகர் நஸ்லேன். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஜர்னி ஆஃப் லவ் 18+. இந்தப் படத்தை இயக்குநர் அருண் டி ஜோஷ் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் நஸ்லேன் உடன் இணைந்து நடிகர்கள் மீனாட்சி தினேஷ்,
மேத்யூ தாமஸ், நிகிலா விமல், பினு பப்பு, மனோஜ் கே.யு., ஷியாம் மோகன், ராஜேஷ் மாதவன், ரெஞ்சுவாக சாஃப், அன்ஷித் அனு, பிரியா ஸ்ரீஜித், குமார் சுனில், நிதின்யா, பாபு அன்னூர் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சனா ரீதியாகவும் வசூல் ரீதியாவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ஃபாலூடா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ரீல்ஸ் மேஜிக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பாளர்கள் அனுமோத் போஸ், ஜி. பிரஜித், மனோஜ் பி.கே.மேனன், ஜினி கே. கோபிநாத் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
Also Read… அரசன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு மற்றும் வெற்றிமாறன் – வைரலாகும் வீடியோ




ஜர்னி ஆஃப் லவ் 18+ படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
நஸ்லேன் மற்றும் மீனாட்சி தினேஷ் இருவரும் பள்ளியில் படிக்கும் போது இருந்தே காதலிக்கின்றனர். இவர்களின் காதல் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்து பிரச்சனை ஆகின்றது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியே ஓடி திருமணம் செய்துக்கொள்கிறார்கள். பிறகு பெண் ஒரு மைனர் என்று பெண் வீட்டார் வழக்கு தொடர்ந்த நிலையில் அவர்களின் காதல் சேர்ந்ததா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது சோனிலிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… ஹேப்பி ராஜ் படத்தில் அப்பாஸ் நடிப்பு எப்படி இருக்கும்? இயக்குநர் ஓபன் டாக்