Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் ரீ-ரிலீஸாகும் மங்காத்தா.. வைரலாகும் பதிவு!

Mankatha Movie Re-release: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் அஜித் குமார். இவர் தற்போது படங்களை தொடர்ந்து கார் ரேஸிலும் ஆர்வம் காட்டிவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டில் வெளியான படம் மங்காத்தா. இப்படம் வெளியாகி 14 வருடங்களை கடந்த நிலையில், ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் ரீ-ரிலீஸாகும் மங்காத்தா.. வைரலாகும் பதிவு!
மங்காத்தாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 20 Dec 2025 21:51 PM IST

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தென்னிந்திய சினிமாவில் சிறப்பான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் நடிப்பதற்கு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அந்த வகையில் இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் மட்டும் 2 படங்ககள் வெளியாகியிருந்தது. அதில் வெளியாகி ரூ 250 கோடிகள் கிட்ட வசூல் செய்திருந்த திரைப்படம்தான் குட் பேட் அக்லி (Good bad Ugly). இப்படத்தின் ஷூட்டிங் முடித்த கையுடன் நேரடியாக கார் ரேஸ் (Car Race) பயிற்சியில் இறங்கினார் அஜித் குமார். அந்த வகையில் தற்போதுவரை கார் ரேஸில் தீவிரமாக இருந்துவருகிறார். இந்நிலையில் இவரின் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டில் வெளியான திரைப்படம்தான் மங்காத்தா (Mankatha). வெங்கட் பிரபுவின் (Venkat Prabhu) இயக்கத்தில் வெளியான இப்படம், அஜித் குமாருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இதில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருந்தார்.

மேலும் இதில் நடிகர்கள், பிரேம்ஜி, வைபவ் , அஞ்சலி, ஆண்ட்ரியா, லக்ஸ்மி ராய், மகத் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த இடமானது 2011ம் ஆண்டில் ரஜினிகாந்தி எந்திரன் படத்தை அடுத்ததாக ஒரு பிரம்மாண்ட திரைப்படமாக தமிழில் அமைந்திருந்தது . அந்த வகையில் இந்த படமானது விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

இதையும் படிங்க: மலையாள திரையுலக ஜாம்பவான் ஸ்ரீனிவாசன் மறைவு – இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்

மங்காத்தா திரைப்பட ரீ- ரிலீஸ் :

நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் வெளியான ஒரு சிறந்த படம்தான் மங்காத்தா. ஆக்ஷன், நகைச்சுவை, காதல் என பல்வேறு ஜானரில் இந்த படமானது இருந்தது. இந்த 2025ம் ஆண்டுடன் இப்படம் வெளியாகி 14 வருடத்தை கடந்துள்ளது. அந்த வகையில் இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அரசன் பட ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி… தயாரிப்பாளர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு

அதன்படி இப்படம் வரும் 2026ம் ஆண்டில் ஜனவரியில் 23ம் தேதியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுவருவதாகவும், இந்த படத்தின் ரீ-ரிலீஸ் மக்களிடையே வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ரீ-ரிலீசை உறுதிசெய்யும் விதத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த பதிவில் இயக்குநர் வெங்கட் பிரபு, “தி கிங்மேக்கர்” என எழுதியுள்ளார். அந்த வகையில் தல அஜித் குமாரின் மங்காத்தா படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து இவர் அப்டேட் கொடுத்துள்ளார் என்பது விருத்தியாகியுள்ளது. அதன்படி இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது