Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மலையாள திரையுலக ஜாம்பவான் ஸ்ரீனிவாசன் மறைவு – இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்

Malayalam film industry legend Srinivasan: மலையாள சினிமாவில் ஜாம்பவனாக வலம் வந்தவர் நடிகர் ஸ்ரீ நிவாசன். இவர் மலையாள சினிமா மட்டும் இன்றி தொடர்ந்து மற்ற மொழிகளிலும் பலப் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் இன்று உயிரிழந்த நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

மலையாள திரையுலக ஜாம்பவான் ஸ்ரீனிவாசன் மறைவு – இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்
ஸ்ரீநிவாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Dec 2025 16:14 PM IST

மலையாள சினிமாவில் கடந்த 70களில் இருந்து நடிகராக வலம் வருபவர் நடிகர் ஸ்ரீனிவாசன். இவர் மலையாள சினிமாவில் பல நூறு படங்களில் நடித்து இருந்தாலும் தமிழ் சினிமாவிலும் அவ்வபோது தொடர்ந்து படங்களில் நடித்து உள்ளார். இவர் மலையாள சினிமாவில் பலப் படங்களில் காமெடி நடிகராகவும் பலப் படங்களில் சிறப்பு கதப்பாத்திரங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவு காரணமாக படங்களில் எதுவும் பெரிய அளவில் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் 69 வயதாகும் நடிகர் ஸ்ரீனிவாசன் உடல் நலக் குறைவு காரணமாகவும் வயது மூப்பு காரணமாகவும் இன்று காலமானார். இந்த செய்தி திரையுலக பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மறைந்த நடிகர் ஸ்ரீனிவாசனுக்கு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆடியோ பதிவின் மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் என்னுடன் பயின்ற எனது உற்ற நண்பர் மறைவைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். மேலும் நல்ல நண்பனை இழந்துவிட்டேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்று அந்த ஆடியோ பதிவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.

நடிகர் கமல் ஹாசன் வெளியிட்ட இரங்கல் பதிவு:

நடிகர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் சில கலைஞர்கள் மகிழ்விக்கிறார்கள், சிலர் அறிவூட்டுகிறார்கள், சிலர் சிந்திக்கத் தூண்டுகிறார்கள். ஸ்ரீனிவாசன் இவை அனைத்தையும் செய்தார், உண்மையைச் சுமந்த புன்னகையுடனும், பொறுப்புணர்வை வெளிப்படுத்திய சிரிப்புடனும். அந்தச் சிறந்த அறிவாளிக்கு என் மரியாதைகள். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

பாடகி கே.எஸ்.சித்ரா வெளியிட்ட இரங்கல் பதிவு:

ஸ்ரீனிவாஸ் சார் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு நான் மிகுந்த துயரமடைந்தேன். அவருடைய பல திரைப்படங்களுக்குப் பாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது ஒரு பெரும் பாக்கியம். இந்தத் துயரமான நேரத்தில் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினருடன் இருக்கும்.

Also Read… Jana Nayagan: ஒரு பேரே வரலாறு… வெளியானது தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட 2வது பாடல்!

நடிகை சிம்ரன் வெளியிட்ட இரங்கல் பதிவு:

மலையாளத் திரையுலகின் ஈடு இணையற்ற கலைஞரான ஸ்ரீனிவாசன் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி என்று அந்தப் பதிவில் நடிகை சிம்ரன் வெளியிட்டு இருந்தார்.

Also Read… இயக்குநராக ஆவதுதான் என் லட்சியம், பிழைப்புக்காகத்தான் நடிகரானேன் – பேசில் ஜோசஃப்