Sudha Kongara: சிவகார்த்திகேயன் அற்புதமான நடிகர்… பராசக்தி படத்திற்கு ஓகே சொன்னது இப்படித்தான்- சுதா கொங்கரா!
Sudha Kongara About Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் பெண் இயக்குநராக பிரம்மாண்ட ஹிட் படங்களை கொடுத்துவருபவர் சுதா கொங்கரா. இவரின் இயக்கத்தில் தமிழில் வரும் 2026ம் ஆண்டு வெளியாகவுள்ள படம்தான் பராசக்தி. இந்த படத்தில் நடிப்பதற்கு சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டது குறித்து, இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவர்தான் சுதா கொங்கரா (Sudha Kongara). இறுதிச்சுற்று திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார். அதற்கு முன் இவரின் பக்கத்தில் வெளியான படம் மக்களிடையே அந்தளவிற்கு வரவேற்பை பெற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட படமாக வெளியாகவுள்ளதுதான் பராசக்தி (Parasakthi). இந்த படத்தில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் ராணா (Rana), ரவி மோகன் (Ravi Mohan), அதர்வா (Athrvaa) உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரியில் 14ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
அந்த வகையில் தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சிறப்பாகவே ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சுதா கொங்கரா, பராசக்தி படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் எவ்வாறு ஒத்துக்கொண்டார் என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.




இதையும் படிங்க: துல்கர் சல்மானின் ஐம் கேம் படத்தில் இணைந்த நடிகை கயடு லோஹர்
பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க காரணம் பற்றி சுதா கொங்கரா:
அந்த நேர்காணலில் இயக்குநர் சுதா கொங்கரா, “சிவகார்த்திகேயன் நடனம் மற்றும் சண்டையாளர் மட்டுமில்லை, அவர் மிகவும் அற்புதமான நடிகர். அவரின் நடிப்பின் மூலம், திரையின் ஒவ்வொரு தருணத்தையும் கொண்டாட்டமாக அணுகுகிறார். சிவகார்த்திகேயனை நான் முதல் முறையாக கொட்டுக்காளி படத்தின் ரிலீஸ் போதுதான் சந்தித்தேன். அப்போது முதலில் அவருக்கு ஒரு காதல் கதையைத்தான் கூறினேன். அது பிடித்திருந்தது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அரசன் படத்தில் எனது கதாபாத்திரம் பற்றி எதுவும் தெரியாது – விஜய் சேதுபதி
பின் இந்த பராசக்தி படத்தின் கதையையும் அவரிடம் தெரிவித்தேன். இந்த கதையை கூறிய 10 நிமிடங்களில் இப்படத்தில் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டார். மேலும் சிவகார்த்திகேயன் மதராஸி படத்திற்காக கொஞ்சம் எடையை அதிகரித்திருந்தார், இதனால் பராசக்தி படத்திற்காக அவரை எடையை குறைக்க கூறியிருந்தோம். அவரும் அந்த உணவு கட்டுப்பாட்டை பின்பற்றி தன்னை மாற்றிக்கொண்டார்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Visual poetry from #Parasakthi🤩#ParasakthiFromPongal#ParasakthiFromJan14@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @DawnPicturesOff @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14 @saregamasouth @dop007 @editorsuriya @supremesundar… pic.twitter.com/W5l2ivdfR4
— DawnPictures (@DawnPicturesOff) December 18, 2025
இந்த பராசக்தி படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் 10 நிமிட காட்சி இன்று 2025 டிசம்பர் 18ம் தேதியில் வெளியாகிறது. அந்த வகையில் மக்களிடையே இப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.