Sudha Kongara: இந்திய மாணவர்கள் அனைவரும் பராசக்திதான்.. அவர்களால் எதையும் சாதிக்க முடியும் – சுதா கொங்கரா பேச்சு!
Sudha Kongara About Student Power: தமிழ் சினிமாவில் பெண் இயக்குநராக ஹிட் படங்களை கொடுத்துவருபவர் சுதா கொங்கரா. இவரின் இயக்கத்தில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம்தான் பராசக்தி. இந்த படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், நேர்காணல் ஒன்றில் இயக்குநர் சுதா கொங்கரா பேசியிருந்தார். அதில் பராசக்தி படம் குறித்தும் மாணவர்களின் வலிமை குறித்தும் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியாகி வெற்றிபெற்ற படம்தான் சூரரைப்போற்று (Soorarai Pottru). இந்த படத்தில் சூர்யா (Suriya) கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இப்படத்திற்காக சூர்யாவிற்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படத்தை அடுத்ததாக சுதா கொங்கராவின் இயக்கத்தில் தமிழில் வெளியாக காத்திருக்கும் படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கதாநாயகனாக நடிக்க, ஸ்ரீலீலா (Sreeleela) கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது இந்தி திணிப்பிற்கு எதிராக மாணவர்களின் போராட்டங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படமானது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படம் வரும் 2026 ஆண்டு ஜனவரி 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சுதா கொங்கரா, மாணவர்களால் நடக்கும் மாற்றங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.




இதையும் படிங்க: ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் வோர்ல்ட் ஆஃப் பராசக்தி கண்காட்சி…!
இந்திய மாணவர்கள் குறித்து சுதா கொங்கரா பகிர்ந்த விஷயம் :
அந்த நேர்காணலில் பராசக்தி திரைப்படத்தை குறித்து சுதா கொங்கரா பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து அவர், ” இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் பராசக்திகள். இளைஞர்கள் என்றாலே பராசக்திகள்தான். அவர்கள் ஏதாவது செய்ய முடிவு செய்தால், நிச்சயம் அவர்களால் எதையும் சாதிக்க முடியும். மேலும் எனக்கு இந்த திரைப்படம் பெரும் பொறுப்பாகவே உணர்ந்தேன்.
இதையும் படிங்க: நிதி அகர்வாலை தொடர்ந்து ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிய சமந்தா ரூத் பிரபு – வைரலாகும் வீடியோ
ஆனால் அது மிகவும் பொருத்தமான ஒன்றாகவே வந்தது. என்னால் இந்த படத்தை செய்யமுடியும் என நம்பினேன், மேலும் ஏ.வி.எம். ஸ்டூடியோஸ் தாராளமாகவே எனக்கு இந்த பராசக்தி என்ற டைட்டிலை கொடுத்தது. மேலும் இந்த டைட்டில் கிடைத்தது எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம்” என்று அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
பராசக்தி படத்தின் கண்காட்சி குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :
Owing to your overwhelming response, the #Parasakthi World extends till Dec 25 🥁#WorldOfParasakthi | Valluvar Kottam | 12 PM – 10 PM#ParasakthiFromPongal@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @DawnPicturesOff @redgiantmovies_… pic.twitter.com/0r0wEwxsh7
— DawnPictures (@DawnPicturesOff) December 21, 2025
நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த பராசக்தி படத்தின் ப்ரோமோஷனாக வேர்ல்ட் ஆஃப் பராசக்தி என ஒரு கண்காட்சியாக நடைபெற்றுவருகிறது. இந்த கண்காட்சி கடந்த 2025 டிசம்பர் 18ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், மக்களின் பறவைக்கு 2025 டிசம்பர் 19ம் தேதி முதல் திறக்கப்பட்டிருந்தது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், வரும் 2025 டிசம்பர் 25ம் தேதி வரை கண்காட்சியை படக்குழு நீட்டித்துள்ளது.