Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Maari 2: வானம் பொழியமா பூமி விளையுமா கூறு.. 7 வருடத்தை நிறைவு செய்த தனுஷ்- சாய் பல்லவியின் மாரி 2 திரைப்படம்!

7 Years Of Maari 2: தென்னிந்திய சினிமாவில் தனது நடிப்பின் மூலம் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான திரைப்படம் மாரி 2. இந்த திரைப்படமானது இன்று 2025 டிசம்பர் 21ம் தேதியோடு வெளியாகி 7 வருடத்தை கடந்துள்ளது.

Maari 2: வானம் பொழியமா பூமி விளையுமா கூறு.. 7 வருடத்தை நிறைவு செய்த தனுஷ்- சாய் பல்லவியின் மாரி 2 திரைப்படம்!
மாரி 2 திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 21 Dec 2025 22:30 PM IST

நடிகர் தனுஷ் (Dhanuhs) தற்போது பான் இந்திய சிறந்த நடிகர்கள் பட்டியலில் இருந்துவருகிறார். தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான இவர் தற்போது, தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டில் மட்டுமே அவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein) மற்றும் குபேரா (Kubera) போன்ற படங்கள் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. அந்த வகையில் தனுஷின் நடிப்பில் தொடர்ந்து திரைப்படங்களும் வெளியாகிவருகிறது. இந்நிலையில் இயக்குநர் பாலாஜி மோகனின் (Balaji Mohan) இயக்கத்தில் இவர் நடித்திருந்த படம்தான் மாரி 2 (Maari 2). இந்த படமானது கடந்த 2018ம் ஆண்டில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) நடித்திருந்தார்.

இவர் இப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது அதிரடி ஆக்ஷ்ன், எமோஷனல் மற்றும் காதல் என மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இப்படமானது இன்று 2025 டிசம்பர் 21ம் தேதி வெளியாகி சுமார் 7 வருடங்களை கடந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: இளையராஜா – ஏ.ஆர். ரஹ்மானுக்கு அடுத்து ஜிவி. பிரகாஷ்தான்.. புகழ்ந்து தள்ளிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.!

தனுஷின் மாரி 2 படம் குறித்து வெளியான எக்ஸ் பதிவு :

இந்த மாரி 2 படமானது கடந்த 2015ம் ஆண்டில் வெளியான மாரி 1 படத்தின் தொடர்ச்சியாக, இதன் முதல் பக்கத்தில் தனுஷிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்த நிலையில், அனிருத் இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் இந்த படமானது வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. அதை அடுத்ததாக கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பின் இந்த மாரி 2 படமானது வெளியாகியிருந்தது. முதல் பாகத்தை ஒப்பிடும்போது இப்படத்திற்கு வரவேற்புகள் குறைவாகத்தான் இருந்தது.

இதையும் படிங்க: படப்பிடிப்பை முடித்தது தனுஷின் D 54 படக்குழு… வைரலாகும் போஸ்ட்

மாரி 2 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில், இதில் ரௌடி பேபி மற்றும் மாரிஸ் ஆனந்தி என்ற 2 பாடல்களும் சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது வரையிலும் தனுஷின் நடிப்பில் வெளியாகி சலிக்காத படங்களின் பட்டியலில் இப்படமும் உள்ளது. இந்த திரைப்படமானது அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் போன்ற ஓடிடி தளங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.