மணி ரத்தினத்துடன் இணையும் விஜய் சேதுபதி- சாய் பல்லவி… படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?
Mani Ratnams Next Movie: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இவரும், நடிகை சாய் பல்லவியும் இணைந்து புது திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர். அந்த படம் குறித்து விவரமாக பார்க்கலாம்.
நடிகர் விஜய் சேதுபதி ( Vijay sethupathi) தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறது. இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியுள்ளது. இவர் சில ஆண்டுகளுக்கு முன் தான் சினிமாவில் நடிக்கவந்த நிலையில், தற்போதுவரை கிட்டத்தட்ட 50 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii) . கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraaj) இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி விஜய் சேதுபதிக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்தாக தெலுங்கில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Puri Jaganadh)இயக்கத்தில் புது படத்தில் நடித்துவந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், மேலும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம். அந்த திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம்(Mani Ratnam) தான் இயக்கவுள்ளாராம்.
இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி (Sai pallavi) நடிக்கவுள்ளாராம். அமரன் படத்தின் நிகழ்ச்சியிலே மணிரத்னம், சாய் பல்லவியுடன் பணியாற்றவேண்டும் என கூறிய நிலையில், அதை செய்து காண்பித்துவிட்டார். இந்த படத்தின் ஷூட்டிங் பற்றிய தகவலும் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: உலக புகழ்பெற்ற வைரல் டான்ஸை ஆடிய அஜித் மகன் ஆத்விக்… வைரலாகும் வீடியோ
விஜய் சேதுபதி- சாய் பல்லவியின் புது பட ஷூட்டிங் எப்போது :
நடிகை சாய் பல்லவி பாலிவுட் சினிமாவில் பிசியாக இருந்துவருகிறார். அதை தொடர்ந்து தமிழில் மணி ரத்னத்தின் இயக்கத்தில் புது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிதான் நாயகனாக நடிக்கவுள்ள நிலையில், இது முற்றிலும் காதல் கதைக்களம் சார்ந்த படமாக தயாராகவுள்ளதாம். இந்த படத்தின் டெஸ்ட் லுக் சமீபத்தில் நடந்த நிலையில், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி காம்போ நன்றாக வந்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் பூஜை நடக்கவுள்ளதாம்.
விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவியின் படம் குறித்து வைரலாகும் பதிவு :
#VijaySethupathi — #SaiPallavi — #ManiRatnam Film Confirm 👍🏼
— The TEST look shoot of this film has been completed.
— The pooja of the film is scheduled to take place in January. The shooting will begin in March or April.
— Official Announcement Coming 🔜 pic.twitter.com/5kNyLfLEhc— Movie Tamil (@_MovieTamil) December 20, 2025
இதையும் படிங்க: 2025ல் டிரென்டிங்.. இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படத்தின் ட்ரெய்லர் எது தெரியுமா? முழு விவரங்கள் இதோ!
மேலும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் 2026ம் ஆண்டு புத்தாண்டோடு அறிவிக்கப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தற்போது இந்த படம் தொடர்பான தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.