Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

DC Movie: லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ பட முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.. புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன்!

DC Movie First Schedule Wraps: தமிழ் பிரபல இயக்குநராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் பல ஹிட் படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் டிசி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் அறிவித்துள்ளார்.

DC Movie: லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ பட முதற்கட்ட  படப்பிடிப்பு நிறைவு.. புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன்!
டிசி திரைப்படம்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 19 Dec 2025 15:21 PM IST

கோலிவுட் சினிமாவில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) வரை பிரபல நடிகர்களை கொண்டு திரைப்படங்களை இயக்கியிருப்பவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இதில் தளபதி விஜயை வைத்து மட்டுமே 2 படங்களை இயக்கி இவர் ஹிட் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் கூலி (Coolie). இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடி வேடத்தில் நடித்திருந்த நிலையில், கடந்த 2025 ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் இப்படம் வெளியாகியிருந்தது. பான் இந்திய மொழிகளில் வெளியான இப்படம் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தற்போது ஹீரோவாக படத்தில் நடித்துவருகிறார். இயக்குநராக நுழைந்த இவர், இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். டிசி (DC) என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் (Anirudh) இசையமைத்துவருகிறார்.

இந்த படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக, பாலிவுட் நடிகை வாமிகா கபி (Wamiqa Gabbi) நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 அக்டோபர் இறுதி முதல் தொடங்கிய நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜேசன் சஞ்சயின் சிக்மா பட ஷூட்டிங் ஓவர்.. முதல் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா?

டிசி படம் குறித்து அருண் மாதேஸ்வரன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Arun Matheswaran (@thatswatitis)

இந்த பதிவில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் டிசி படத்தில் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்ததாக தெரிவித்துள்ளார். இந்த படத்தில் இயக்குநரும், நடிகருமான லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் கதாநாயகனாக நடிக்க, நடிகை வாமிகா கபி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளதாக தெரிகிறது. இவர் ஏற்கனவே தமிழில் “மாலை நேரத்து மயக்கம்”, “இறைவாக்காலம்” போன்ற படங்களில் தமிழில் நடித்துள்ளார். மேலும் கடந்த 2024ல் தெறி படத்தின் இந்தி ரீமேக் படமான பேபி ஜான் படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிசி படத்தின் ரிலீஸ் எப்போது :

லோகேஷ் கனகராஜ் மற்றும் வாமிகா கபியின் நடிப்பில் உருவாகிவரும் இந்த டிசி படம் ஒரு ஆக்ஷ்ன் சார்ந்த காதல் கதையில் தயாராகிவருகிறது. இதில் லோகேஷ் கனகராஜ் உட்பட சில பிரபலங்களும் இணைந்து நடித்துவருகின்றனர். இந்த படமானது சுமார் 60 முதல் 70 கோடி பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாக கூறப்படும் நிலையில், அனிருத் இசையமைத்துவருகிறார்.

இதையும் படிங்க: 2025ல் ரூ 100 கோடிகள் வசூல் செய்த தமிழ் நடிகர்களின் படங்கள் என்னென்ன.. விவரமாக தெரிஞ்சிக்கோங்க!

சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகிவந்தது. அதில் அனிருத்தின் இசையும் மிகவும் அருமையாகவே இருந்தது. அந்த வகையில் இப்படம் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது