சிம்பு படம் குறித்து அஸ்வத் மாரிமுத்து கொடுத்த சூப்பர் அப்டேட்!
Director Ashwath Marimuthu: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஓ மை கடவுளே. இந்தப் படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. ரொமாண்டிக் ஃபேண்டசி காமெடியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக மாறினார். அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது மற்றும் இன்றி பிரபலத்தையும் ஏற்படுட்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான படம் ட்ராகன். கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது மட்டும் இன்றி வசூல் ரீதியாக பெரும் சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிம்புவின் 51-வது படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த நிலையில் அஸ்வத் மாரிமுத்து சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




சிம்பு படம் குறித்து அஸ்வத் மாரிமுத்து கொடுத்த சூப்பர் அப்டேட்:
அதில், நான் தற்போது ஒரு திரைக்கதை எழுதி வருகிறேன், அது நன்றாக வந்து கொண்டிருக்கிறது. இந்த காலகட்டம் எனக்குச் சற்று மனச்சோர்வாக இருக்கிறது. டிசம்பருக்குள் கதையை எழுதும் பணியை முடிக்கவில்லை என்றால், நான் இந்தப் படத்தை செய்ய மாட்டேன். ஆனால், நான் அதை ஏறக்குறைய முடித்துவிட்டேன்.
‘ஓ மை கடவுளே’ படத்திற்குப் பிறகு, சிலம்பரசன் டி.ஆரை வைத்து ஒரு படம் இயக்க விரும்பினேன், அதைத்தான் இப்போது செய்யப் போகிறேன். இது ஒரு மிக பிரம்மாண்டமான பட்ஜெட் படம், ஆனால் சரியான தேதிகளும் ஒரு தயாரிப்பாளரும் கிடைக்காததால், நான் அங்கேயே முடங்கிவிட விரும்பவில்லை. அதனால் அதிலிருந்து விலகி, ‘டிராகன்’ படத்தை இயக்கச் சென்றேன்.
நான் ‘டிராகன்’ படத்தை இயக்கியபோது, படத்தில் ஏதாவது ஸ்டார் நடிகர் இருக்கிறாரா என்று எல்லோரும் என்னிடம் கேட்டார்கள். நான் ஆம், பிரதீப் ரங்கநாதன் தான் இந்தப் படத்தின் ஸ்டார் நடிகர் என்று சொன்னேன். இப்போது அவர் ஒரு நட்சத்திரமாகிவிட்டார். மணிரத்னம், ஷங்கர் மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோர் தங்கள் கதாநாயகர்களை விட அதிகப் புகழ்பெற்றவர்கள். ஒரு இயக்குநரும் ஒரு பிராண்டாக மாற முடியும் என்பதற்கு அவர்களே சிறந்த உதாரணங்கள் என்று அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
Also Read… மணி ரத்தினத்துடன் இணையும் விஜய் சேதுபதி- சாய் பல்லவி… படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#AshwathMarimuthu in a recent interview:
‣I am currently writing a script, and its coming out well. This phase has been slightly depressing for me 😅 If I don’t complete the writing before December, I wont do this film. But I am almost done with it ✅
‣After Oh My Kadavule, I… pic.twitter.com/T2BKrwOnS4
— Sugumar Srinivasan (@Sugumar_Tweetz) December 20, 2025