Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Parasakthi: பராசக்தி படத்தின் ரிலீஸில் மாற்றமா? ஜன நாயகனுடன் மோதுகிறதா? படக்குழு வெளியிட்ட விஷயம் என்ன?

Jana Nayagan VS Parasakthi: தமிழ் சினிமாவில் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரின் 25வது திரைப்படமாக வெளியாகி காத்திருப்பதுதான் பராசக்தி. இப்படம் 2026 ஜனவரி 14ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸில் மாற்ற ஏற்படவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது. இரு குறித்து படக்குழு என்ன தெரிவித்துள்ளது என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Parasakthi: பராசக்தி படத்தின் ரிலீஸில் மாற்றமா? ஜன நாயகனுடன் மோதுகிறதா? படக்குழு வெளியிட்ட விஷயம் என்ன?
பராசக்தி Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 20 Dec 2025 16:43 PM IST

நடிகர் சிவகார்த்திகேயனின்(Sivakarthikeyan) நடிப்பில் தமிழ் சினிமாவில் தற்போது பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் முற்றிலும் ஆக்ஷ்ன் கதைக்களத்தில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் மதராஸி (Madharaasi). இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படம் இவருக்கு அந்தளவிற்கு வரவேற்பைப் கொடுக்கவில்லை. இந்த படத்தை அடுத்ததாக இவரின் 25வது திரைப்படமாக தயாராகியிருப்பதுதான் பராசக்தி (Parasakthi). இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்க, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் (Aakash Bhaskaran) தயாரித்துள்ளார். இவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பராசக்தி படமானது கடந்த 1960ல் நடந்த இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்பான உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்திகேயன், ஸ்ரீலீலா Sreeleela), ரவி மோகன் (Ravi Mohan), அதர்வா (Atharvaa), ராணா உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது இந்த 2025ம் ஆண்டில் வெளியிட முடிவு செய்த நிலையில், பின் 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியில் வெளியாக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படவுள்ளதாகவும், ஜன நாயகன் (Jana Nayagan) படத்துடன் நேரடியாக மோத ஜனவரி 10ம் தேதியில் வெளியிட முடிவுசெய்துள்ளதாக வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ பட முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.. புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன்!

சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் ரிலீஸில் மாற்றம் உள்ளதா:

இந்த பராசக்தி படம் வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 14ல் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்தின் ரிலீஸ்ட்டிற்கு 6 நாட்களுக்கு முன் தளபதி விஜய்யின் ஜன நாயாகின படம் ( 2026 ஜனவரி 9ம் தேதி) வெளியாகிறது. இந்த படமானது தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ஒட்டுமொத்த ரசிகர்களிடையேயும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அந்த வகையில் இப்படத்துடன் பராசக்தி மோதுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் தயாரிப்பாளர் குறித்து இணையத்தில் தகவல் வைரலாகிவருகிறது அவர் பிறபல கட்சியில் ஒருவர் என்ற நிலையில், இந்த முடிவில் இறங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஒரு பேரே வரலாறு பாடல்

சிவகார்த்திகேயனின் பராசக்தி படக்குழு வெளியிட்ட ப்ரோமோஷன் தொடர்பான பதிவு :

இந்நிலையில் சமீபத்தில் இப்படம் 2026 ஜனவரி 10ம் தேதியில் வெளியிட முடிவு செத்துவருவதாக கூறப்பட்டுவந்த நிலையில், படக்குழு சமீபத்தில் வெளியிட்ட பதிவில் பராசக்தி ஜனவரி 14ம் தேதி முதல் என்றே பதிவிட்டுள்ளது. அந்த வகையில் இந்த பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியில் தற்போதுவரை எந்த மாற்றமும் இல்லை என்பதே உண்மை. ஒருவேளை ரிலீஸ் தேதி மாற்றப்படவுள்ளது என்றால் படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.