நல்லவளாவே இருக்க முடியாது… லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணு… பிக்பாஸில் கனிக்கு விஜி கொடுத்த மாஸ்டர் ப்ளான்!
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 11 வாரங்கள் முடிவடைந்து 12-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறும் நிலையில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து கொண்டு இருக்கின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தொடங்கிய போது போட்டியில் 20 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து வைல்கார்ட் போட்டியாளர்கள் 4 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளே சென்ற நிலையில் மொத்தம் 24 நபர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் வாரம் வாரம் போட்டியாளர்களில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி வந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து மூன்று முறை பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன் நடைப்பெற்றது. இப்படி இருக்கும் சூழலில் கடந்த வாரமும் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன் நடைப்பெற்றது. இந்த நிலையில் இந்த 12-வது வாரம் பிக்பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் ஃப்ரீஸ் டாஸ்க் வழங்கப்படும் போது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியளர்கள் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்றைய டாஸ்கில் பிக்பாஸ் வீட்டில் சாண்ட்ராவின் குடும்பத்தின் உள்ளே வந்தனர். அதில் அவரது கணவரும் சிந்த சீசனில் முன்னாள் போட்டியாளர். மேலும் அவருடன் அவர்களின் இரட்டை குழந்தைகளும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். இவர்கள் உள்ளே வந்து செய்த குறும்பு ரசிகர்களிடையே அதிக அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் வீட்டில் உள்ள போட்டியாளர்களும் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள்.
பிக்பாஸில் கனிக்கு விஜி கொடுத்த மாஸ்டர் ப்ளான்:
இந்த நிலையில் இன்றைய ஃப்ரீஸ் டாஸ்கில் பிக்பாஸ் வீட்டில் கானா வினோத்தின் குடும்பத்தினர் மற்றும் கனி திருவின் குடும்பத்தினர் உள்ளே வந்துள்ளனர். அதில் கனி திருவின் தங்கை விஜி முன்பு பிக்பாஸில் போட்டியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் கனியிடம் விஜி பல அட்வைஸ்களை கொடுக்கிறார். தொடர்ந்து நல்லவளாக மட்டும் இருக்க கூடாது, உன்னிடம் சரியாக நடந்துக்கொள்ளாதவர்களை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகரக்ளிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பிக்பாஸில் கம்ருதின் – பார்வதி இடையே வெடித்த சண்டை… வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day79 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision” pic.twitter.com/sNIOdBcRla
— Vijay Television (@vijaytelevision) December 23, 2025
Also Read… நிதி அகர்வாலை தொடர்ந்து ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிய சமந்தா ரூத் பிரபு – வைரலாகும் வீடியோ



