இது வாழ்க்கையை முடிவு பண்ற இடம் கிடையாது… பிக்பாஸில் கம்ருதினுக்கு அட்வைஸ் கொடுத்த அவரது அக்கா
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் இன்று பார்வதி மற்றும் கம்ருதினின் குடும்பத்தினர் வருகின்றனர். இந்த நிலையில் கம்ருதினிடம் அவரது அக்கா பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ரசிகர்களிடையே நெகட்டிவான விமர்சனத்தையேப் பெற்று வருகின்றது. இதனை மாற்ற தொடர்ந்து நிகழ்ச்சிக் குழுவும் பல வழிகளில் முயற்சித்து வருகின்றது. ஆனாலும் இந்த சீசனில் உள்ள போட்டியாளர்கள் அதனை முற்றிலும் மாற்றிவிட்டனர். இப்படி இருக்கும் சூழலில் ஒரு சில போட்டியாளர்கள் மட்டும் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவது ரசிகர்களிடையே சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. மேலும் இந்த சீசசின் மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 11 போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர். அதில் எத்தனை போட்டியாளர்கள் மற்றும் யார் யார் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் இறுதி வரை செல்வார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவளுடன் காத்திருக்கின்றனார்.
இந்த நிலையில் இந்த 12-வது வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. இதில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றது. இது கடந்த திங்கள் முதல் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் ஃப்ரீஸ் டாஸ்கில் பார்வதி மற்றும் கம்ருதின் குடும்பத்தினர் வந்துள்ளனர். இந்த நாளிற்காக தான் பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டும் இன்றி பார்வையாளர்களும் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




பிக்பாஸில் கம்ருதினுக்கு அட்வைஸ் கொடுத்த அவரது அக்கா:
அதன்படி தற்போது வெளியாகி உள்ள புரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டிற்குள் கம்ருதின் உடைய அக்கா ஃபேமிலி வருகின்றது. அதில் கம்ருதின் அக்காவை பார்வதி அக்கா என்று கூற அவரும் தங்கச்சி என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து கம்ருதினிடம் பேசிய அவரது அக்க இது வாழ்க்கையை முடிவு செய்யும் இடம் இல்லை என்றும், பார்வதியுடன் பழகுவதை மறைமுகமாகவும் கண்டித்தார். இதன் காரணமாக இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… நோ சூர்யா.. நோ அமீர்கான்.. டோலிவுட் நடிகரை நோக்கிச் செல்லும் லோகேஷ் கனகராஜ்
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day81 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/gZayySV0Hn
— Vijay Television (@vijaytelevision) December 25, 2025
Also Read… கிறிஸ்துமஸை முன்னிட்டு நாளை தியேட்டரில் வெளியாகும் படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ