Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீ நம்புரவங்கதான் உனக்கு ஆப்பு வைப்பாங்க… பீட் பாக்ஸிங் பண்ணாத – பிக்பாஸில் சுபிக்‌ஷாவிடம் வெளிப்படையாக கூறிய குடும்பத்தினர்

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தொடர்ந்து இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது இன்று இறுதியாக இந்த டாஸ்க் நடைபெறும் நிலையில் இன்று விக்ரம் மற்றும் சுபிக்‌ஷா குடும்பத்தினர் உள்ளே சென்றுள்ளனர்.

நீ நம்புரவங்கதான் உனக்கு ஆப்பு வைப்பாங்க… பீட் பாக்ஸிங் பண்ணாத – பிக்பாஸில் சுபிக்‌ஷாவிடம் வெளிப்படையாக கூறிய குடும்பத்தினர்
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Dec 2025 14:24 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மொழியில் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ஒவ்வொரு சீசனிலும் நடிகராகவோ, பிரபலமாகவோ இல்லாத ஒரு சில நபர்களை தொடர்ந்து இந்த இந்த நிக்ழ்ச்சியில் கலந்துகொள்ள வைக்கின்றனர். அதே போல இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் எந்தவித சினிமா பின்புலனும் இல்லாமல் கலந்துகொண்ட போட்டியாளர்தான் சுபிக்‌ஷா. மீனவ குடும்பத்தை சேர்ந்த இவர் தனது தந்தை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது தானும் உடன் சென்று பல வீடியோக்களை எடுத்து அதனை யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மக்களிடையே பிரபலம் ஆனார். தங்களது இயல்பான வாழ்க்கையை தினமும் படம் பிடித்து மக்களுக்கு காட்டியதன் மூலம் இணையத்தில் மக்களிடையே கவனத்தைப் பெற்று வந்த சுபிக்‌ஷா இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பீட் பாக்ஸிங் கற்றுக்கொள்வதாக அவர் செய்த விசயங்கள் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டது. வீட்டில் உள்ள மற்றப் போட்டியாளர்களின் கருத்தை மனத்தில் வைத்து தொடர்ந்து சொந்த கருத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதாலும் பல நெகட்டிவான விமர்சனத்தைப் பெற்று வந்தார் சுபிக்‌ஷா. இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் ஃப்ரீஸ் டாஸ்கில் அவரது குடும்பத்தினர் வந்து என்ன சொன்னார்கள் என்பது குறித்து வீடியோ வெளியாகி உள்ளது.

பீட் பாக்ஸிங் பண்ணாத – பிக்பாஸில் சுபிக்‌ஷாவிடம் வெளிப்படையாக கூறிய குடும்பத்தினர்:

அதன்படி இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் சுபிக்‌ஷாவின் அப்பா, அம்மா மற்றும் தம்பி அவரை பார்ப்பதற்காக வந்துள்ளனர். அப்போது வீட்டில் உள்ளவர்கள் சுபிக்‌ஷா பின்பு என்ன எல்லாம் பேசுகிறார்கள் என்பதை தெரிவித்த அவரது தம்பி தொடர்ந்து பீட் பாக்ஸிங் செய்யாத நன்றாக இல்லை என்று வெளிப்படையாக கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… நோ சூர்யா.. நோ அமீர்கான்.. டோலிவுட் நடிகரை நோக்கிச் செல்லும் லோகேஷ் கனகராஜ்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கிறிஸ்துமஸை முன்னிட்டு நாளை தியேட்டரில் வெளியாகும் படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ