பராசக்தி படத்திற்காக மிகவும் மெனக்கெட்டார் ஸ்ரீலீலா – இயக்குநர் சுதா கொங்கரா
Sudha Kongara About Sreeleela: நடிகை ஸ்ரீ லீலா தற்போது பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகிறார். இவர் தற்போது பராசக்தி படத்திற்காக எவ்வளவு மெனக்கெட்டார் என்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா பேட்டி ஒன்றில் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீ லீலா. இவர் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் பராசக்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியுள்ளார். அதன்படி இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து உள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் ரவி மோகன், ஸ்ரீ லீலா, அதர்வா முரளி, பேசில் ஜோசஃப், ராணா டகுபதி,பிரித்விராஜன், குரு சோமசுந்தரம் மற்றும் பாப்ரி கோஷ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த பராசக்தி படம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பாக தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் வருகின்ற 10-ம் தேதி ஜனவரி மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.




பராசக்தி படத்திற்காக மிகவும் மெனக்கெட்டார் ஸ்ரீலீலா:
இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியதாவது, ஸ்ரீலீலா தமிழை ஆழமாகக் கற்று, ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தத்தையும் புரிந்துகொண்டார். அவர் உண்மையிலேயே நடனத்தின் ராணி. அதிக ஒப்பனை இல்லாமல், இவ்வளவு இயல்பான அழகை திரையில் பார்த்து நீண்ட காலமாகிவிட்டது, மேலும் ஸ்ரீலீலா வைஜெயந்திமாலாவை நினைவுபடுத்துகிறார்.
‘பராசக்தி’ படப்பிடிப்பின் போது, அவர் தனது இறுதி மருத்துவத் தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்தார். அவர் காலையில் தேர்வுகளை முடித்துவிட்டு, மதியத்திற்குள் நேராக படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துவிட்டார். நான் அவருடைய கண்களில் ஒரு தீப்பொறியைக் கண்டேன், அந்த கணமே, இந்தப் படத்தில் ரத்னமாலா கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியானவர் என்று நான் முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
Also Read… கானா வினோத்தை காணவந்த அவரின் குடும்பம்.. கண்ணீருடன் கதறிய வினோத் – வைரலாகும் புரோமோ!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Director #SudhaKongara – Recent Interview 🎥
— #Sreeleela learned Tamil deeply, understanding the meaning of every single word 🗣️📚. She is truly a queen of dance 👑💃. It’s been a long time since we’ve seen such a natural beauty on screen without heavy makeup, and Sreeleela… pic.twitter.com/nosgqf4nU7
— Movie Tamil (@_MovieTamil) December 23, 2025