Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

‘உலகின் தலைசிறந்த சொல்.. செயல்’ – திரையரங்குகளில் வெளியாகி 8 ஆண்டுகளைக் கடந்தது வேலைக்காரன் படம்

8 Years Of Velaikkaran Movie : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் வேலைகாரன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை தற்போது ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

‘உலகின் தலைசிறந்த சொல்.. செயல்’ – திரையரங்குகளில் வெளியாகி 8 ஆண்டுகளைக் கடந்தது வேலைக்காரன் படம்
வேலைக்காரன் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Dec 2025 18:09 PM IST

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கியவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய போதே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார் சிவகார்த்திகேயன். மேலும் சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற சிவகார்த்திகேயன் தனது நடிப்பு வாழ்க்கையை காமெடி நடிகராக தொடங்கினார். தொடர்ந்து மற்ற ஹீரோவின் படத்தில் காமெடி நடிகராக மட்டும் நடிக்காமல் நாயகனாக படங்களில் நடிக்கத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். ஆனாலும் தனது ஆரம்பகால படங்களில் தொடர்ந்து காமெடியை மையமாக வைத்து படங்களில் நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் பிறகு அழுத்தமான கதைகளை தேர்வு செய்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறியுள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெறுவது மட்டும் இன்றி பாக்ஸ் ஆபிஸிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் வேலைக்காரன். இயக்குநர் மோகன் ராஜா எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் ஃபகத் பாசில் கார்பரேட் வில்லனாக நடித்து இருந்தார். இவர் நயன்தாரா, சினேகா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ், விஜய் வசந்த், ரோபோ சங்கர், ரோகிணி, சார்லி, ராம்தாஸ், அருள்தாஸ், காளி வெங்கட், மன்சூர் அலி கான், வினோதினி வைத்தியநாதன், மைம் கோபி, சையத், ஒய்.ஜி.மகேந்திரா, மதுசூதன ராவ், மகேஷ் மஞ்சரேக்கர், சரத் ​​லோஹிதாஷ்வா, அனிஷ் குருவில்லா, நாகிநீடு, விவேக் பிரசன்னா, உதய் மகேஷ், பாலாஜி வேணுகோபால், சரவண சுப்பையா, மாயா எஸ்.கிருஷ்ணன், வழக்கு எண் முத்துராமன், ஷியாம் பிரசாத், விஜயராஜ், மிதுன் ராஜ், ராஜி விஜய் சாரதி, அப்துல், யுவ லட்சுமி, ஆர்ஜே ஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

Also Read… பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தின் நடிகை இவரா? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!

8 ஆண்டுகளைக் கடந்தது வேலைக்காரன் படம்:

கார்பரேட் நிறுவனங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை எப்படி எல்லாம் மார்க்கெட்டிங் செய்து மக்களிடையே விற்பனை செய்கிறார்கள் என்பதே இந்தப் படத்தின் கதை. படத்தில் சேல்ஸ் பர்சனாக இருக்கும் சிவகார்த்திகேயன் கார்ப்பரேட்டில் நடைபெறும் தவறான செயல்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட முயற்சி செய்கிறார். அதனை எப்படி மக்களுக்கு புரியும் வகையில் அவர் காட்டினார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 8 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

Also Read… மீண்டும் காலித் ரஹ்மான் உடன் கூட்டணி வைக்கும் மம்முட்டி – வெளியானது புது பட அப்டேட்