நான் இப்படியிருக்க விஜய் சார்தான் காரணம்.. அவருக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்- தயாரிப்பாளர் லலித் குமார் பேச்சு!
Producer Lalit Kumar Thanks Thalapathy Vijay: தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனத்தில் ஒன்றுதான் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளராக இருந்துவருபவர் லலித் குமார். சமீபத்தில் சிறை படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில், கலந்துகொண்ட இவர் தளபதி விஜய்க்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் பேசியது குறித்து விவரமாக பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாக இருப்பவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் மாஸ்டர் (Master)மற்றும் லியோ (Leo) போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம்தான் “7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ்” (7 Screen Studios). இந்த நிறுவனத்தை தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார் (S.S.Lalit Kumar) நடத்திவருகிறார். இந்த நிறுவனமானது தளபதி விஜய்யின் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த மாஸ்டர் மற்றும் லியோ போன்ற வெற்றி படங்களை தயாரித்திருந்தது. குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK), சிறை (Sirai) மற்றும் ஹாய் (Hi) போன்ற புது திரைப்படங்களையும் தயாரித்துவருகிறது. அந்த வகையில் வரும் 2025ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதியில் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள சிறை என்ற படமானது வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். இப்படம் எமோஷனல், காதல் மற்றும் அதிரடி திருப்பங்கள் கொண்ட கதைக்களத்தில் தயாராகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி இன்று 2025 டிசம்பர் 22ம் தேதியில் சென்னையில் நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் லலித் குமார் கலந்துகொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய இவர், தளபதி விஜய்க்கு எப்போதும் நன்றி கடன் பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: ‘Racing isn’t acting’.. அஜித் குமாரின் கார் ரேஸ் ஆவணப்படத்தின் டீஸர் வெளியானது!
தளபதி விஜய் குறித்து மேடையில் பேசிய தயாரிப்பாளர் லலித் குமார் :
அந்த நிகழ்ச்சியில் பேசிய லலித் குமார், “இன்று 7 ஸ்கீரின் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் உலகமெங்கும் தெரிகிறது என்றால் அதற்கு விஜய் சார் மட்டும்தான் காரணம். அன்று விஜய் சாரா மாஸ்டர் படத்தய் எங்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுத்த காரணத்தால், அன்று கொரோனா லாக்டவுன் நேரத்திலும் சரியாக சேர்ந்தது. மேலும் அதன் காரணமகத்தின் அவரின் லியோ படைத்தய்யும் நான் தயாரித்தேன்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தில் ரஜினியை அழகாக பயன்படுத்தியிருக்கார் நெல்சன் – சிவராஜ்குமார்
லியோ படத்திற்கு பின் வட்டாரங்கள் எல்லாம் இந்நிறுவனத்தை பற்றி பேசுகிறது என்ற அதற்கு அவர் மட்டுமே காரணம். மேலும் விஜய் சாருக்கு நானா எப்போதும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்” என அவர் அதில் எமோஷனலாக தெரிவித்திருந்தார்.
தளபதி விஜய் குறித்து தயாரிப்பாளர் லலித் பேசிய வீடியோ பதிவு :
7 Screen Studio is known worldwide today because of Vijay sir..🤝❣️He gave me #Master during lockdown and I released it properly.. Because of that I got #Leo .. I will forever be grateful to #ThalapathyVijay..🌟
– Producer Lalith kumar at #Sirai event pic.twitter.com/vdVJMXAOil
— Laxmi Kanth (@iammoviebuff007) December 22, 2025
தயாரிப்பாளர் லலித் குமாரின் தயாரிப்பில் தற்போது தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இந்நிறுவனத்தின் கீழ் இன்னும் அருமையான கதையில் 3 படங்களுக்கும் மேல் தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் விக்ரம் பிரபுவின் சிறை படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.