பிக்பாஸில் எல்லாரும் அவங்க அவங்க கேம் ஆடுறாங்க… அமித் மனைவி ஓபன் டாக்
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறுவது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளர்களும் ரசிகர்களும் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த டாஸ்க் ஃப்ரீஸ் டாஸ்க். அதன்படி இந்த 12-வது வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தற்போது 12-வது வாரம் அரோரா, திவ்யா, சாண்ட்ரா, கனி, சுபிக்ஷா, விக்ரம், சபரி, கம்ருதின், கானா வினோத், அமித் பார்கவ் மற்றும் பார்வதி என மொத்தம் 11 போட்டியாளர்கள் தற்போது உள்ளனர். இதில் இந்த வாரம் நாமினேஷனில் வீட்டு தலையான கம்ருதினை தவிற மற்ற 10 போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முன்பு எபோதும் இல்லாத அளவிற்கு இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இந்த வாரம் வழங்கப்பட்டுள்ள ஃப்ரீஸ் டாஸ்கை விளையாடி வருகின்றனர்.
அதன்படி இந்த வாரத்திற்கான ஃப்ரீஸ் டாஸ்கில் இதுவரை பிக்பாஸ் வீட்டிற்குள் சாண்ட்ரா, கனி திரு, சபரி, கானா வினோத் ஆகியோரின் குடும்பத்தினர் வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று மற்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மற்ற போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வர உள்ளனர். இதில் பார்வதியின் குடும்பத்தினர் மட்டும் பிக்பாஸ் வீட்டில் 24 மணி நேரமும் தங்க அனுமதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.




பிக்பாஸில் எல்லாரும் அவங்க அவங்க கேம் ஆடுறாங்க:
இந்த நிலையில் இன்று பிக்பாஸில் அமித பார்கவின் மனைவி மற்றும் மகள் எண்ட்ரி கொடுத்துள்ளனர். அப்போது அமித்தின் மனைவி அவரிடம் மற்றவர்களின் கேம் எப்படி உள்ளது என்பது குறித்து விளக்கமாக கூறுகிறார். அப்போது பாரு தன்னைக் குறித்து பின்னால் பேசுகிறாரா என்று அமித் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அவர் இங்க எலாரும் அவங்க அவங்க கேம் ஆடுறாங்க.. நீயும் உன் கேம் ஆடு என்று அட்வைஸ் கூறும் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… Sirai Movie: ரிலீஸிற்கு முன்பே சிறை பட இயக்குநருக்கு கார் பரிசு.. தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day80 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/fQMF0hBcy7
— Vijay Television (@vijaytelevision) December 24, 2025