Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்ருதி ஹாசனின் பர்த்டே ஸ்பெஷல்… போஸ்டரை வெளியிட்ட ஆகாசம்லோ ஓக தாரா படக்குழு

Aakasamlo Oka Tara Movie: தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் ஆகாசம்லோ ஓக தாரா படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

ஸ்ருதி ஹாசனின் பர்த்டே ஸ்பெஷல்… போஸ்டரை வெளியிட்ட ஆகாசம்லோ ஓக தாரா படக்குழு
ஸ்ருதி ஹாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Jan 2026 17:26 PM IST

உலக அளவின் சினிமா ரசிகர்களால் உலக நாயகன் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் கமல் ஹாசன். தமிழ் சினிமாவில் பல உலகதரம் வாய்ந்த விசயங்களை அறிமுகம் செய்து வைத்ததில் கமல் ஹாசனுக்கு பெரும் பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் திரையுலகில் உள்ளது போலவே இவரின் வாரிசுகளான மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் இருவரும் திரைத்துறையில் உள்ளனர். அதன்படி நடிகை அக்‌ஷரா ஹாசன் திரையுலகில் நடிகை மற்றும் பாடகி என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார். அதன்படி தமிழ் சினிமாவில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான 7-ம் அறிவு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். இவர் முன்னதாக இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ் சினிமாவில் 7-ம் அறிவு படத்திற்கு பிறகு நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இவர் நடிகையாக மட்டும் இன்றி பலப் படங்களுக்கு பாடகியாகவும் பாடல்களைப் பாடியுள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வைரலாகும் ஸ்ருதி ஹாசனின் பர்த்டே ஸ்பெஷல் போஸ்டர்:

இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் இன்று ஜனவரி மாதம் 28-ம் தேதி 2026-ம் ஆண்டு தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்த நிலையில் இவர் தெலுங்கு சினிமாவில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து வரும் ஆகாசம்லோ ஓக தாரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். இந்த நிலையில் படக்குழுவினர் ஸ்ருதி ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி போஸ்டரை வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் ரசிகர்களீடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… தமிழ் சினிமாவில் பிரபல நடிகரின் படத்தில் அறிமுகமாகும் மிருணாள் தாகூர்

ஆகாசம்லோ ஓக தாரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ரீ ரிலீஸாகிறது சிலம்பரசனின் சூப்பர் ஹிட் படமான சிலம்பாட்டம்… எப்போது தெரியுமா?