தமிழ் சினிமாவில் பிரபல நடிகரின் படத்தில் அறிமுகமாகும் மிருணாள் தாகூர்
Mrunal Thakur: நடிகை மிருணாள் தாக்கூர் தெலுங்கு மற்றும் இந்தி என தொடர்ந்து பல மொழிகளில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக நடிக்கவில்லை என்றாலும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்கும் போதே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் கவனத்தையும் பெற்றவர் நடிகை மிருணாள் தாகூர். இவர் இந்தி சீரியல்களில் நடித்து இருந்த நிலையில் அந்த சீரியல்கள் தமிழில் டப் செய்து வெளியான போதே தமிழக மக்களிடையே வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து சீரியல்களில் பிரபலமான பிறகு தற்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான ஹலோ நந்தா என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை மிருணாள் தாகூர். தொடர்ந்து மராத்தியில் பலப் படங்களில் நடித்த மிருணாள் தாக்கூர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்தி சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை மிருணாள் தாக்கூர் கடந்த 2022-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான சீதா ராமம் என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய மொழி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார். இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை மிருணாள் தாகூர் நாயகியா நடித்தார். இந்தப் படத்தை தொடர்ந்து தென்னிந்திய மொழி ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். மேலும் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் பான் இந்திய அளவில் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரின் படத்தில் அறிமுகமாகும் மிருணாள்:
தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையா வலம் வரும் மிருணாள் தாக்கூர் இதுவரை தமிழ் மொழியில் படங்களில் நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் தமிழில் தற்போது நடிகர் சிலம்பரசனின் 51-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… ரூட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Buzz – #MrunalThakur is the front runner for the female lead in #STR51, directed by Ashwath Marimuthu♥️✨
If it happens, it will mark Tamil debut for Mrunal & Gonna pair up with #SilambarasanTR in an Rom-Com Fantacy film🔥#Anirudh is scoring music for the film🎶 pic.twitter.com/rbaR25AWLJ
— AmuthaBharathi (@CinemaWithAB) January 27, 2026
Also Read… தனது 367-வது படத்தின் அறிவிப்பை வெளியிட்ட நடிகர் மோகன்லால் – வைரலாகும் பதிவு



