AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரீ ரிலீஸாகிறது சிலம்பரசனின் சூப்பர் ஹிட் படமான சிலம்பாட்டம்… எப்போது தெரியுமா?

Silambattam Movie Re Release Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் முன்னதாக இவரது நடிப்பில் வரவேற்பைப் பெற்ற சிலம்பாட்டம் படம் தற்போது ரீ ரிலீஸாகிறது.

ரீ ரிலீஸாகிறது சிலம்பரசனின் சூப்பர் ஹிட் படமான சிலம்பாட்டம்… எப்போது தெரியுமா?
சிலம்பாட்டம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Jan 2026 17:43 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சிலம்பாட்டம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 17 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.சரவணன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் நடிகர் சிலம்பரசன் இந்தப் படத்தில் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பிரபு, சினேகா, சனா கான், சந்தானம், நெடுமுடி வேணு, கிஷோர், பொன்வண்ணன், கருணாஸ், விநாயகன், மனோபாலா, நிரோஷா, யுவராணி, ராகவ், எஸ்.என்.லட்சுமி, பிரகதி, அனு மோகன், இளவரசு, மயில்சாமி, கிரேன் மனோகர், சென்ட்ராயன், லொள்ளு சபா பாலாஜி, அபூர்வா, வி.சுவாமிநாதன், பூச்சி செந்தில், மாஸ்டர் பரத், கனல் கண்ணன், பிரேம்ஜி அமரன், அந்தரா பிஸ்வாஸ், ரச்சனா மவுரியா, ராபர்ட், சாம்ஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன் மற்றும் டி.எஸ்.ரங்கராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

Also Read… உங்ககூட சேர்ந்து போராட்டம் மட்டும் பண்ணனும்… ஆனா உங்களுக்கு போட்டியா வந்துட கூடாதுல – வெளியானது தினேஷின் கருப்பு பல்சர் படத்தின் ட்ரெய்லர்!

ரீ ரிலீஸாகிறது சிலம்பரசனின் சூப்பர் ஹிட் படமான சிலம்பாட்டம்:

தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படங்கள் தொடர்ந்து ரீ ரிலீஸாகிறது. அதன்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ந்து ரீ ரிலீஸாவது போல தற்போது நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் முன்னதாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சிலம்பாட்டம் படம் தற்போது மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸாகிறது. அதன்படி படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 6-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது சிம்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… மம்முட்டி – மோகன்லாலின் பேட்ரியாட் படத்தின் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் அட்லி

Follow Us