ஜன நாயகன் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை எத்தனை கோடிக்கு விற்கப்பட்டுள்ளது தெரியுமா?
Jana Nayagan Tamil Nadu Release Rights : விஜய்யின் கடைசி திரைப்படமாக மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம்தான் ஜன நாயகன். இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 09ம் தேதியில் வெளியாகிறது. இப்படத்தின் வியாபாரம் தற்போது பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் நிலையில், இதன் தமிழக ரிலீஸ் உரிமைகள் மட்டும் எத்தனை கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமாவில் சிறந்த நாயகனாக இருப்பவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் கடைசி படமாக உருவாகியிருப்பதுதான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது அரசியல் மற்றும் மக்கள் நீதி தொடர்பான கதையில் தயாராகியிருக்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் (H.Vinoth) இயக்க, கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இந்த படமானது சுமார் ரூ 400 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், அனிருத்தின் (Anirudh) இசையமைப்பில் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.
மேலும் இப்படத்தின் ரிலீஸ் வியாபாரம் மிகவும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் ஜன நாயகன் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை மட்டுமே எத்தனை கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளது தெரியுமா?. தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட தமிழக ரிலீஸ் உரிமை மட்டும் சுமார் ரூ 106. 50 கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.




இதையும் படிங்க: விஜய் சேதுபதி குறித்து புகழ்ந்து பேசிய நெல்சன் திலீப் குமார் – வைரலாகும் வீடியோ
ஜன நாயகன் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
We’re jumping straight to 2001. Close your eyes… and let ‘Rukku Rukku Roop Kya’ pull you back ❤️
Welcome onboard #VijayYesudas for the #ThalapathyThiruvizha – A live tribute concert 🔥
📍Bukit Jalil Stadium, Kuala Lumpur, Malaysia
See you on Dec 27, 2025 ❤️@KvnProductions… pic.twitter.com/bKMq463yIR
— KVN Productions (@KvnProductions) November 25, 2025
ஜன நாயகன் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் டிக்கெட் விலை :
தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 2025ம் டிசம்பர் 27ம் தேதியில் மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியானது தளபதி திருவிழா என்ற பெயரில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் பாடல்கள் 35 பாடப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு பாடகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.
இதையும் படிங்க: பிக்பாஸ் ஸ்கூல் டாஸ்கில் தன்னை குறித்து தவறாக வந்த மொட்டை கடுதாசி… கடுப்பான பார்வதி – எழுதியது யார்?
இது விஜய்யின் கடைசி படம் என்ற நிலையில், இந்த நிகழ்ச்சியானது மிக பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. நிலையில் இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளதாம். அதன்படி முதல் பிரிவு டிக்கெட்டின் விலை சுமார் ரூ 8000 முதல் 8500 ரூபாயாகவும், 2வது பிரிவு ரூ6000 முதல் 6,500 ரூபாயாகவும் மற்றும் 3வது பிரிவு ரூ 2500 முதல் 3000 ரூபாயாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18,000 மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.