நடிகர் தனுஷ் படத்தில் இணையும் நடிகர் பிரகாஷ் ராஜ் – அப்டேட் இதோ!
Actor Prakash Raj: நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது நடிகர் தனுஷ் உடன் மீண்டு கூட்டணி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தேரே இஷ்க் மெய்ன் என்ற பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதை பிரகாஷ் ராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

கன்னடத்தில் 1990-ம் ஆண்டு வெளியான முத்தின ஹாரா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் பிரகாஷ் ராஜ் (Actor Prakash Raj). இதனைத் தொடந்து 1993-ம் ஆண்டு வரை தொடர்ந்து கன்னட சினிமாவில் நடித்து வந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ். பின்னர் 1994-ம் ஆண்டு இயக்குநர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான டூயட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆன முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகர் பிரகாஷ் ராஜ். அதனைத் தொடர்ந்து தமிழில் பம்பாய், ஆசை, கல்கி, விஸ்வநாத், பூமணி, அலெக்சாண்டர், இருவர், மின்சார கனவு, விஐபி, நேருக்கு நேர், விடுகதை, சந்திப்போமா, சொல்லாமலே, என் சுவாச காற்றே, படையப்பா, ராஜஸ்தான் என 2000-ம் ஆண்டு வரை தமிழில் படங்களில் நடித்தார் பிரகாஷ்ராஜ்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். படங்களில் நடிப்பது மட்டும் இன்றி அவ்வப்போது சமூக கருத்துகளைப் பேசி சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகியும் வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழில் நடித்த அப்பு, வானவில், ரிஷி என பல படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் இவர் விஜயின் கில்லி படத்தில் முத்துப்பாண்டி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வில்லனாக மிரட்டியிருப்பார் பிரகாஷ் ராஜ். அதில் அவர் த்ரிஷாவை செல்லம் என்று அழைக்கும் வசனமும் மிகவும் பிரபலம் ஆனது. சமீபத்தில் ரீ ரிலீஸ் ஆன போது இந்தப் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜை தற்போது உள்ள இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ரெட்ரோ படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் அடுத்தடுத்து தமிழில் ஜன நாயகன் மற்றும் மிராக்கல் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது நடிகர் தனுஷ் உடன் அடுத்ததாக பாலிவுட் படத்தில் இணைந்து நடிக்க உள்ளது குறித்த அப்டேட்டை தெரிவித்துள்ளார். அதன்படி தி லாலன்டாப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், பிரகாஷ் ராஜ் தனது நடிப்பில் வரவிருக்கும் படங்கள் குறித்துப் பேசியுள்ளார்.
அதில் நான் தற்போது இயக்குநர் ஆனந்த் எல் ராயின் இயக்கத்தில் அவரது அடுத்த படமான தேரே இஷ்க் மெய்ன் படத்தில் நடித்து வருகிறேன் தனுஷ் மற்றும் கிருதி சனோன் நடிக்கும் இந்தப் படம் தான் தற்போது நான் நடிக்கும் ஒரே ஒரு இந்தி படம் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்டியுள்ளது.