Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தியேட்டரில் வெற்றிநடைபோடும் களம் காவல் படம்… எவ்வளவு வசூலித்தது தெரியுமா?

Kalamkaval Box Office Collection: மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் களம் காவல். இந்தப் படத்தின் வசூல் விவரம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தியேட்டரில் வெற்றிநடைபோடும் களம் காவல் படம்… எவ்வளவு வசூலித்தது தெரியுமா?
களம் காவல் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Dec 2025 11:50 AM IST

மலையாள சினிமாவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. 70 வயதைக் கடந்தாலும் தொடர்ந்து மலையாள சினிமாவில் இளம் நடிகர்களுக்கு போட்டியாக நடித்து வருகிறார் நடிகர் மம்முட்டி. அதன்படி இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை மூன்று படங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கிய டாம்னிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ், டீனோ டென்னிஷ் எழுதி இயக்கிய பசூகா மற்றும் தற்போது இயக்குநர் ஜித்தின் கே ஜோஷ் எழுதி இயக்கிய களம் காவல் என தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது  குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான களம் காவல் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி உடன் இணைந்து நடிகர்கள் விநாயகன், ஜிபின் கோபிநாத், ரஜிஷா விஜயன், காயத்ரி அருண், ஸ்ருதி ராமச்சந்திரன், அரவிந்த் எஸ்.கே. குஞ்சன், அஸீஸ் நெடுமங்காடு, பிஜு பாப்பன், பிபின் பெரும்பிள்ளைகுனல், மாளவிகா மேனன், ஹரிசங்கர் எஸ்.ஜி, தன்யா அனன்யா, ஆர். ஜே. சூரஜ், தேவதேவன் விஜயராகவன், என்.பி. நிசா, அபி சுஹானா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

தியேட்டரில் வெற்றிநடைபோடும் களம் காவல் படம்:

2000-ம் ஆண்டிற்கு முன்னதாக இந்தப் படத்தின் கதை நடப்பதாக காட்டப்படுகின்றது. இதில் தொடர்ந்து நடைபெறும் மர்மமான கொலைகளை விசாரிக்கும் நபராக வருகிறார் நடிகர் விநாயகன். இறுதியில் விசாரணையில் அந்த தொடர் சம்பவங்களுக்கான தொடர் சங்கிலியை கண்டுபிடிக்கிறார் விநாயகன். இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டியின் நடிப்பைப் பார்த்து மிரண்டுபோனதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் நிலையில் படத்தின் வசூல் நிலவரம் குறித்து படக்குழு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி படம் தற்போது வரை ரூபாய் 75 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

Also Read… இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சூர்யா 46 படம்… ரிலீஸ் எப்போது தெரியுமா?

களம் காவல் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விமல் நடிப்பில் வடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சசிகுமார்