Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ajith Kumar: நான் அவர்களை மிகவும் நேசிக்கிறேன்.. தனது ரசிகர்கள் குறித்து அஜித் குமார் நெகிழ்ச்சி!

Ajith Kumar About His Fans: தென்னிந்திய சினிமாவில் நடிகரும் கார் ரேஸஸுமாக இருந்துவருபவர் அஜித் குமார். இவர் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டிருந்தனர். தற்போதும் கார் ரேஸ் பயிற்சியில் தீவிரமாக இருந்துவருகிறார். சமீபத்தில் ஆங்கில பத்திரிக்கை நேர்காணலில் பேசிய இவர் தனது ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

Ajith Kumar: நான் அவர்களை மிகவும் நேசிக்கிறேன்.. தனது ரசிகர்கள் குறித்து அஜித் குமார் நெகிழ்ச்சி!
அஜித் குமார் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Dec 2025 17:10 PM IST

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தற்போது கார் ரேஸ் (Car Race) பயிற்சியில் தீவிரமாக இருந்துவருகிறார். இவர் கடந்த 2024ம் ஆண்டு இறுதி முதல் கார் ரேஸ் பயிற்சியில் தீவிரமாக இருந்துவரும் நிலையில், கிட்டத்தட்ட 1 ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு கார் ரேஸ் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டிருக்கிறார். அந்த வகையில் இதுவரை கலந்துகொண்ட பல போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். மேலும் இந்திய சினிமாவை (Indian Cinema) பிரபலப்படுத்தும் விதத்தில் தனது கார் ரேஸ் அணியின் லோகோவையும் சிறப்பாகவே அமைந்திருந்தார். இது இந்திய சினிமாவில் பிரதிநித்துவம் படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் மலேசியாவில் (Malaysia) நடந்த 24H கார் ரேஸ் தொடரில் தனது அணியுடன் அஜித் குமார் கலந்துகொண்டிருந்தார். இந்த ரேஸின்போது மலேசிய ரசிகர்கள் பலரும் நேரில் சென்று அஜித் குமாரை சந்தித்திருந்தார்.

இந்நிலையில் இந்த போட்டியில் அஜித் குமாரின் அணியானது 4வது இடத்தை பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆசியா லீ மேன்ஸ் போட்டிக்காக அஜித் குமார் தீவிர பயிற்சியில் இருந்துவரும் நிலையில், சமீபத்தில் ஆங்கில பத்திரிகை நேர்காணலில் பேசியுள்ளார். அதில் அவர் தனது ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கிச்சா சுதீப்பின் மார்க் படத்தில் இணைந்த நடிகர் யோகி பாபு – போஸ்டர் வெளியிட்ட படக்குழு

தனது ரசிகர்கள் குறித்து அஜித் குமார் பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் பேசிய அஜித் குமார், அதில், “நான் எனது ரசிகர்களை மிகவும் நேசிக்கிறேன், அவர்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கும், எங்களுக்காக எல்லா வழிகளிலும் வந்து, எங்களுக்காக பிரார்த்தனை செய்வதற்கும், எங்களுக்காக வாழ்த்துவதற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். தற்போது இவர் பேசியது தொடர்பான வீடியோ ரசிகர்களிடையே வெளியாகி வைரலாகிவருகிறது.

ரசிகர்களும் குறித்து அஜித் குமார் நெகிழ்ச்சியாக பேசிய வீடியோ பதிவு :

நடிகர் அஜித் குமார் தற்போது 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறும் ஆசியா லீ மேன்ஸ் போட்டிக்காக தயாராகிவருகிறார். இதற்காக தனது அணியினருடன் தீவிர பயிற்சியில் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் ரேஸை முடித்த கையேடு அஜித் AK64 படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் பராசக்தி பட 3வது பாடல் புரோமோ.. பாடல் எப்போது வெளியாகிறது தெரியுமா?

இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு இறுதியில் ஆரம்பமாகும் என இப்படத்தின் ரவிச்சந்திரன் சமீபத்தில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். மேலும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் எது என்பது குறித்த இன்னும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.