Anirudh: ரஜினியின் 75வது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடிய அனிருத்.. வைரலாகும் வீடியோ!
Anirudh celebrate Rajinikanths Birthday In Theater: தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக வலம்வருபவர் அனிருத் ரவிச்சந்தர். அந்த வகையில் நேற்று 2025 டிசம்பர் 12ம் தேதியில் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக படையப்பா ரீ- ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. அங்கு அனிருத் ரசிகர்களுடன் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
பான் இந்தியா அளவிற்கு தற்போது மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவரின் இசையமைப்பில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் (Ajith Kumar) வரை பல்வேறு பிரபலங்களும் திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவர் தமிழில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்துவருகிறார். இவர் தீவிர அஜித் குமார் ரசிகராக இருந்தாலும், தளபதி விஜய் முதல் ரஜினிகாந்த் (Rajinikanth) வரை உச்ச பிரபலங்களின் படங்களுக்கும் இசையமைத்துவருகிறார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகும் பல படங்களுக்கும் அனிருத் தான் இசையமைத்துவருகிறார். இறுதியாக வெளியாகியிருந்த வேட்டையன் (Vettaiyan) மற்றும் கூலி (Coolie) போன்ற படத்திற்கும் இவர்தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நேற்று (2025 டிசம்பர் 12ம் தேதி) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். இந்நிலையில் அவரின் நடிப்பில் வெளியான படையப்பா (Padayappa) படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை ரோகிணி திரையரங்குக்கு சென்ற அனிருத், அங்கு ரசிகர்களுடன் படத்தை இணைந்து கொண்டாடியது தொடர்பான வீடியோ ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: இனிமேல் அவர் நடிக்க மாட்டாரானு ஒரு வருத்தம் இருக்கு… விஜய் குறித்து எமோஷ்னலாக பேசிய அனிருத்
ரஜினியின் பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடிய அனிருத் தொடர்பான வீடியோ :
That’s how #Anirudh celebrated his idol superstar #Rajinikanth birthday yesterday along with fans during #Padayappa re-release 🌟🤩pic.twitter.com/bUocvAXH0g
— AmuthaBharathi (@CinemaWithAB) December 13, 2025
இந்த வீடியோவில் அனிருத், படையப்பா படத்தை பார்க்கவந்த ரசிகர்களுடன் வைப் செய்துள்ளார். ரஜினிகாந்திற்கு பிறந்தநாளை வாழ்த்துக்கள் கூறி, பின் ஜெயிலர் படத்திலிருந்து வெளியான பாடலை படித்து ரசிகர்களை மேலும் குஷியாக்கியிருந்தார். மேலும் ரசிகர்களின் கொண்டாட்டத்தை வீடியோ எடுத்து தலைவர் ரஜினிகாந்திற்கு வர அனுப்புவதாகவும் கூறியிருந்தார். இதனால் மேலும் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அனிருத் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஜெயிலர் 2வில் அனிருத் :
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்த நடித்துவரும் படம்தான் ஜெயிலர் 2. இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்ட நிலையில் உள்ளது. இதில் ரஜினிகாந்துடன் நடிகர்கள் விநாயகன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரு கைதியின் காதல் கதையில் அதிரடி திருப்பம்.. வெளியானது விக்ரம் பிரபுவின் ‘சிறை’ பட ட்ரெய்லர்!
இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துவரும் நிலையில், இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தயாராகியுள்ளதாம் மேலும் இப்பாடல்கள் அருமையாக வந்திருப்பதாகவும் அனிருத் தெரிவித்திருந்தார். இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.