Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிகர் அருண் விஜய்… ரெட்ட தல வெற்றியடைந்தா? இல்லையா? விமர்சனம் இதோ!

Retta Thala Movie Review: நடிகர் அருண் விஜய் மீண்டும் இரட்டை வேடத்தில் தற்போது நடித்துள்ள படம் ரெட்ட தல. இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதா இல்லையா என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிகர் அருண் விஜய்… ரெட்ட தல வெற்றியடைந்தா? இல்லையா? விமர்சனம் இதோ!
ரெட்ட தலImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 25 Dec 2025 19:24 PM IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் அருண் விஜய். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்த நிலையில் அப்போது இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடையே வெற்றியைப் பெறவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. தொடர்ந்து பல முயற்ச்சிகளை எடுத்து வந்த நிலை இவருக்கு சினிமாவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படம் தான். இதில் நடிகர் அஜித் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகர் அருண் விஜய் ஸ்டைலிசான வில்லனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு அருண் விஜயின் சினிமா வாழ்க்கையே மாறியது என்று சொல்லலாம்.

இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் அருண் விஜய் என்ன மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் ரசிகர்கள் அதனை கொண்டாடித் தீர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் வணங்கான். இயக்குநர் பாலா எழுதி இயக்கிய இந்தப் படம் அருண் விஜய்க்கு இந்த ஆண்டில் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தது என்று கூறலாம். அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தில் வில்லனாகவும் நடிகர் அருண் விஜய் கலக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரெட்ட தல வெற்றியடைந்தா? இல்லையா?

இந்த நிலையில் இன்று நடிகர் அருண் விஜய் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ட தல. இந்தப் படத்தை இயக்குநர் கிருஷ் திருக்குமரன் எழுதி இயக்கி உள்ளார். படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் வெளியாகி உள்ள நிலையில் இதில் நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து உள்ளார். முன்னதாக இவர் இரட்டை வேடத்தில் நடித்த தடம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது.

Also Read… நீ அந்த விசயத்தில் ஹீரோவா இருக்கனும்… பிக்பாஸில் கம்ருதினுக்கு பார்வதியின் அம்மா கொடுத்த அட்வைஸ்

இதன் கரணமாக இந்தப் படமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் நன்றாக இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்தில் சில காட்சிகள் அதிக நேரம் காட்டப்பட்டு பார்வையாளர்களை சலிப்படைய வைத்தது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read… இந்த பாடலைப் பாடியது உங்கள் தளபதி விஜய்… ஜன நாயகன் படத்தின் 3-வது சிங்கிள் குறித்த அப்டேட் இதோ