விஜய் சார் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது – நடிகை பூஜா ஹெக்டே
Actress Pooja Hegde: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் ஜன நாயகன் படம் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் முகமூடி. இந்தப் படத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படத்தின் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தாலும் தொடர்ந்து தமிழில் அதிக அளவில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவில்லை. மாறாக தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் நடிகை பூஜா ஹெக்டே. இந்த நிலையில் முகமூடி படத்திற்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் நடிக்கத் தொடங்கினார் நடிகை பூஜா ஹெக்டே. அதன்படி இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்தார் நடிகை பூஜா ஹெக்டே.
இந்தப் படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் நடிகை பூஜா ஹெக்டே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் அடுத்ததாக ரெட்ரோ படத்தில் நடித்தார். அதன்படி இந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் தமிழில் அடுத்ததாக ஜன நாயகன் படம் வெளியாக உள்ளது.



விஜய் சார் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது:
ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மலேசியாவில் நடைப்பெற்றது. அதில் கலந்துகொண்ட நடிகை பூஜா ஹெக்டே படம் குறித்தும் படக்குழுவினர் குறித்தும் நிறைய விசயங்களைப் பேசினார். அதில் குறிப்பாக நடிகர் விஜய் குறித்து பல விசயங்களை தெரிவித்தார்.
அதன்படி பூஜா ஹெக்டே பேசியதாவது, சார், பீஸ்ட் படத்தில் உங்களுடன் பணியாற்றியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அரபிக் குத்து பார்ட் 2 எப்போது வரும் என்று மக்கள் என்னிடம் எப்போதும் கேட்கிறார்கள். உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நான் இதுவரை பணியாற்றிய நட்சத்திரங்களிலேயே நீங்கள் மிகவும் தொழில்முறை குணம் கொண்டவர். ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்தும், நீங்கள் மிகவும் பணிவானவர். நான் உங்களைப் போலவே இருக்க விரும்புகிறேன். உங்கள் பணிவை நான் எப்போதும் போற்றிப் பாராட்டுகிறேன். இது உங்கள் கடைசிப் படம் என்பது வருத்தமாக இருக்கிறது. தமிழ் ரசிகர்களுக்கு நன்றி. முகமூடியாக இருந்தாலும் சரி, அரபிக் குத்தாக இருந்தாலும் சரி, நீங்கள் எப்போதும் என் படைப்புகளை விரும்பி ஆதரித்திருக்கிறீர்கள் என்று தெரிவித்து இருந்தார்.
Also Read… ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்… உறுதி செய்த வில்லன் நடிகர்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#PoojaHegde’s about #JanaNayaganAudioLaunch
— #HVinoth is an honest 🎬 filmmaker. A man of few words 🗣️.
Always a big fan of your work 🙌. I keep listening to your songs 🎶, especially the OSTs 🎧.
KVN sir is such a stylish producer 😎.#MamithaBaiju, you look absolutely…— Movie Tamil (@_MovieTamil) December 27, 2025
Also Read… பராசக்தி படத்தில் அந்த பிரபல ஹீரோதான் நடிக்க வேண்டியது… இயக்குநர் சுதா கொங்கரா ஓபன் டாக்