ஜன நாயகன் ஆடியோ லாஞ்சில் இத்தனை ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்களா? அனிருத் கொடுத்த அப்டேட்!!
Jana Nayagan Audio Launch:தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் தளபதி விஜய். இவரின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் படம் வரும் 2026 ஆண்டு ஜனவரியில் 9ம் தேதியில் வெளியாகிறது. அந்த வகையில் நாளை (2025 டிசம்பர் 27ம் தேதி) மலேசியாவில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் எத்தனை ஆயிரம் மக்கள் கலந்துகொள்கிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
நடிகர் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவந்தது. அந்த வகையில் இவர் தற்போது முழுமையாக அரசியலில் இறங்கியுள்ளார். இந்நிலையில் இந்த ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படம் அவரின் கடைசி திரைப்படமாகும். இப்படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் நிலையில், வரும் 2025 ஜனவரி 9ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் (H. Vinoth) தயாரிக்க, கே.வி.என்.ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ரிலிஸ் கிட்ட நெருங்கும் நிலையில், இப்படத்தின் இசைவெளியிட்டுவிழா வரும் 2025ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதியில் மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. அந்த வகையில் இன்று 2025 டிசம்பர் 26ம் தேதியில், இசைவெளியீட்டு விழாவிற்காக தளபதி விஜய் உட்பட ஜன நாயகன் படக்குழுவினர் அனைவரும் மலேசியாவிற்கு புறப்பட்டுவிட்டனர்.
அந்த வகையில் அனிருத்தும் (Anirudh) மலேசியாவிற்கு புறப்பட்டுவிட்டார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அனிருத், ஜன நாயகன் இசை வெளியிட்டு விழா குறித்து தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: பிக்பாஸில் பார்வதியை பங்கமாக கலாய்த்த விக்ரம் அம்மா… வைரலாகும் வீடியோ
ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து பேசிய அனிருத்:
இந்நிலையில் சென்னையில் செய்தியார்லர்களிடம் பேசிய அனிருத், “ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 80,000 மேற்பட்டவர்கள் வருவார்கள் என கூறினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு செல்வதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என தெரிவித்தார். மேலும் செய்தியாளர் ஒருவர் அனிருத்திடம், விஜயின் அடுத்த படத்தில் பணியாற்றுவீர்களா? என கேள்வி கேட்டிருந்தார்.
இதையும் படிங்க: 2025-ல் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சின்னத்திரை பிரபலங்கள் யார் யார்? – லிஸ்ட் இதோ!
அதற்கு பதிலளித்த அனிருத், “இது ஒன் லாஸ்ட் ஜான்ஸ் நா”என தெரிவித்திருந்தார். மேலும் பேசிய அவர், “தளபதி விஜய் மற்றும் எனது காமினேஷனில் வெளியான ஹிட் பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் பாடப்படவுள்ளது” என்றும் தெரிவித்திருந்தார்.
ஜன நாயகன் பட இசை வெளியீட்டுவிழாவிற்கு புறப்பட்ட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தொடர்பான வீடியோ :
GUESS WHO’S HERE??? 🎬🔥
NELSON !!!!!! 😎💥
Yes, he has officially landed for Thalapathy Katcheri ✨The excitement just hit a whole new level —
ARE YOU READY? 🕺🔥Because this is about to get MASSIVE 💣🎶@KvnProductions @malikstreams pic.twitter.com/teCe2cvPLt
— KVN Productions (@KvnProductions) December 26, 2025
இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு தளபதி பாய்ஸ் என ரசிகர்களால் அழைக்கப்படும் அட்லீ, நெல்சன் திலீப்குமார் மற்றும் லோகேஷ் கனகராஜ் உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்ளளவுள்ளனர். இதில் அட்லீ மற்றும் நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே புறப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷும் கலநதுகொள்ள்ளவுள்ளார் என கூறப்படுகிறது.