Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிக்பாஸில் பார்வதியை பங்கமாக கலாய்த்த விக்ரம் அம்மா… வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃபிரீஸ் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக உள்ளே செல்லும் வீடியோ தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பிக்பாஸில் பார்வதியை பங்கமாக கலாய்த்த விக்ரம் அம்மா… வைரலாகும் வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Dec 2025 11:20 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடர்ந்து இன்றுடன் 82 நாட்களை கடந்துள்ளது. இந்த நிலையில் இந்த 12-வது வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தொடர்ந்து ஃப்ரீஸ் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதில் வீட்டில் உள்ள 11 போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்ப்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். முன்பு 8 சீசன்களாக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த டாஸ்க் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் ரசிகர்களை பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒவ்வொரு சீசனிலும் ஃப்ரீஸ் டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் உள்ளே வருவதை விட போட்டியாளர்கள் பிக்பாஸ் கூறுவது போல ஃப்ரீஸ், லூப் என போட்டியாளர்களிடம் கூறி வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும். ஆனால் இந்த சீசனில் அந்த மாதிரி எந்த மகிழ்ச்சியான விசயமும் நடைபெறவில்லை. மேலும் உள்ளே உள்ள போட்டியாளர்களும் சுவாரஸ்யமாக விளையாடவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இதுவரை கனி திரு, சபரி, திவ்யா, கம்ருதின், சாண்ட்ரா, பார்வதி, அரோரா, அமித், கானா வினோத் ஆகியோரின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். இவர்களைத் தொடர்ந்து இன்று பிக்பாஸ் வீட்டில் விக்ரமின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்துள்ளது தொடர்பான வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

பிக்பாஸில் பார்வதியை பங்கமாக கலாய்த்த விக்ரம் அம்மா:

இந்த நிலையில் விக்ரமின் அம்மாவிடம் பார்வதி விக்ரம் குறித்து புகார் கூறுவதுபோல ஜாலியாக பேசுகிறார். அதனைக் கேட்ட விக்ரமின் அம்மாவும் பார்வதியை கிண்டலடிக்கும் விதமாக பேசுகிறார். மேலும் பார்வதி மாதிரி ஒரு தங்கை இருந்து இருக்க வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பிக்பாஸில் எல்லாரும் அவங்க அவங்க கேம் ஆடுறாங்க… அமித் மனைவி ஓபன் டாக்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பராசக்தி படத்திற்காக மிகவும் மெனக்கெட்டார் ஸ்ரீலீலா – இயக்குநர் சுதா கொங்கரா