திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர் – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..
2004 ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு சென்னையில் உள்ள அதிமுக தொண்டர்கள் மற்றும் பிறர் ஆண்டுதோறும் டிசம்பர் 26 ஆம் தேதி இயற்கை பேரழிவின் நினைவு தினத்தன்று அஞ்சலி செலுத்துகின்றனர். இந்த அஞ்சலி நிகழ்வுகள், டிசம்பர் 26, 2004 அன்று நிகழ்ந்த பேரழிவு நிகழ்வைக் குறிக்கும் வகையில், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பரவலாக நடைபெறும் நினைவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாகும்.
திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த நிலையில், அப்போது செல்லாத முதலமைச்சர் தற்போது ஏன் செல்கிறார் என்றால், தேர்தல் நெருங்கிவிட்டதுதான் காரணம். அதனால் தற்போது ஒரு பயம் ஏற்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது முதலமைச்சருக்கு கமல்ஹாசனின் படத்தில் வரும் காட்சி போல எதை எடுத்தாலும் பயமே உள்ளது என்றும் கூறினார். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதில் மக்கள் தயாராகிவிட்டனர் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
Latest Videos
