Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Year Ender: 2025ல் தோல்வி படங்களை கொடுத்த பிரபல தமிழ் இயக்குநர்கள்.. அட இவர்களும் இந்த லிஸ்டில் உண்டா?

Top Tamil Directors' 2025 Flops: இந்த 2025ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் தமிழ் பிரபல இயக்குநர்களின் இயக்கத்திலும் பிக் பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு, படுதோல்வி படங்களை கொடுத்த தமிழ் இயக்குனர்கள் யார் யார் மற்றும் எந்த படம் தோல்வி என்பது குறித்து பார்க்கலாம்.

Year Ender: 2025ல் தோல்வி படங்களை கொடுத்த பிரபல தமிழ் இயக்குநர்கள்.. அட இவர்களும் இந்த லிஸ்டில் உண்டா?
பிரபல தமிழ் இயக்குநர்கள்Image Source: Social media
Barath Murugan
Barath Murugan | Published: 27 Dec 2025 23:23 PM IST

மணி ரத்னம் (Mani Ratnam): இயக்குநர் மணிரத்னம் திரைப்படங்கள் என்றாலே அதற்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. காதல் படம் முதல் வரலாற்று தமிழ் படங்கள் வரை தமிழ் சினிமாவில் இன்றியமையாத இயக்குநர்களில் ஒருவராகவே இவர் இருந்து வருகிறார். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் தக் லைஃப் (Thug Life). இந்த திரைப்படமானது கடந்த 2025 ஜூன் 5ம் தேதியில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் கமல்ஹாசன் (kamal Haasan), சிலம்பரசன் (Silambarasan) மற்றும் திரிஷா மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படமானது சுமார் ரூ 300 கோடி பட்ஜெட்டில் வெளியாகியிருந்த நிலையில், இந்த 2025ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படத்தில் ஒன்றாக இருந்தது.

ஆனால் இப்படம் ரிலீஸானபோது ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றியது என்றே கூறலாம். அந்த வகையில் இந்த படமானது படுதோல்வி அடைந்திருந்தது. இப்படம் வெறும் ரூ100 முதல் ரரூ 120 கோடிகள் வரை மட்டுமே வசூலித்திருந்தது. இந்நிலையில் மணிரத்தினத்திற்கு இது பெரும் தோல்வி படமாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 2025-ல் வசூலில் மாஸ் காட்டிய அஜித்குமார் மற்றும் ரஜினிகாந்த்!

இயக்குநர் எஸ்.சங்கர் (S. Shankar):

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் என்றாலே அதற்கு உதாரணம் இயக்குநர் எஸ். சங்கர்தான். இவரின் இயக்கத்தில்தான் பான் இந்திய அளவிற்கு ஒரு ரோபோ கதையை மையமாக கொண்டு எந்திரன் என்ற படம் வெளியாகியிருந்தது. இந்த படமானது அப்போதுஇ பல கோடிகளை வசூலித்திருந்தது. அந்த வகையில் தமிழ் சினிமவில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்களை கொடுத்துவந்த இவருக்கு, கடந்த 2024ம் ஆண்டில் வெளியான இந்தியன் 2 படம் பெரும் தோல்வியை கொடுத்திருந்தது. இந்த தோல்வியை அடுத்து தெலுங்கு சினிமாவின் பக்கம் சென்ற இவர், நடிகர் ராம் சரணை (Ram Charan) வைத்து தி கேம் சேஞ்சர் (Game Changer) என்ற படத்தை இயக்கியிருந்தார். அதிரடி அரசியல் கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த 2025ம் ஜனவரி மாதத்தில் வெளியானது. ரூ 360 கோடி பொருட்செலவில் தயாரான இப்படம், வெறும் ரூ 185 முதல் ரூ 200 வரை மட்டுமே வசூலித்து தோல்வியை கொடுத்தது.

இயக்குநர் மகிழ் திருமேனி (Magizh Thirumeni) :

இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் இந்த 2025ம் ஆண்டில் வெளியான படம் விடாமுயற்சி (Vidaamuyarchi). தல அஜித் குமார் மற்றும் திரிஷா நடித்திருந்த இப்படம், பிரேக்டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக். இப்படமானது கடந்த 2023ம் ஆண்டின் இறுதி முதல் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்தது. இதனை அடுத்தாக இப்படம் 2025ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இப்படம் வெளியான முதல் நாளிலே நெகடிவ் விமர்சனங்களை பெற்ற நிலையில், மகிழ் திருமேனிக்கு பெரிய தோல்வி படமாக அமைந்துவிட்டது.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (AR.Murugadoos) :

மற்ற இயக்குநர்களை ஒப்பிடும்போது இந்த 2025ம் ஆண்டில் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் 2 தோல்வி படங்கள் அமைந்தது. அதில் முதல் தோல்வி படம்தான் சிக்கந்தர். பாலிவுட்டில் வெளியான இப்படத்தில் நடிகர் சல்மான் கான், ராஷ்மிகா மற்றும் காஜல் அகர்வால் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் கதை மற்றும் வசூல் ரீதியான பெரும் தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: 2025ல் வெளியான மலையாளம் பெஸ்ட் திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன?

பின் இவரின் இயக்கத்தில் தமிழில் வெளியான படம் மதராஸி. சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி வசந்தின் நடிப்பில் கடந்த 2025 செப்டம்பரில் இப்படம் வெளியானது. இப்படம் ரூ 200 கோடி பட்ஜெட்டில் தயாரான நிலையில், உலகளாவிய வசூலில் வெறும் ரூ 100 கோடிகள் மட்டுமே வசூலித்து தோல்வியை சந்தித்தது.

தனுஷ் (Dhanush) :

நடிகரும் இயக்குநருமான தனுஷின் இயக்கத்தில் 2025ம் ஆண்டில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. அதில் முதலில் வெளியான படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இலன் நடிகர்களை வைத்து இவர் இயக்கியிருந்த இப்படம் கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் வெளியானது. இந்த படத்துடன் டிராகன் படம் வெளியாகியிருந்த நிலையில், இப்படத்திற்கு அளவிற்கு வரவேற்பு கிடைக்காமல் தோல்வியை சந்தித்து.

மேலும் இவரின் இயக்கத்திலும் நடிப்பிலும் 2வது வெளியான படம் இட்லி கடை. இப்படம் 2025 அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகியிருந்தது. இப்படத்தின் ரிலீஸ் போது கரூர் பிரச்சனை நடந்திருந்த நிலையில், மக்களிடையே இப்படத்திற்கு கணவன் கிடைக்கவில்லை. பின் ஓடிடி வந்தபிறகு கொண்டாடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.