2025ல் வெளியான மலையாளம் பெஸ்ட் திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன?
Top 5 Malayalam Thriller Movies: தென்னிந்திய சினிமாவில் தமிழ் சினிமாவிற்கு அடுத்தபடியாக பிரபலமாக இருந்துவரும் சினிமாதான் மலையாளம். இந்த சினிமாவில் வித்தியாசமாக திரைப்படங்கள் வெளியாகி பான் இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. அந்த வகையில் 2025ல் வெளியான சிறந்த மலையாள திரில்லர் படங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
ஆபிசர் ஆன் டியூட்டி (Officer on Duty): மலையாள சினிமாவில் பிரபல இயக்குநர் ஜித்து அஷ்ரஃப் (Jithu Ashraf) இயக்கத்தில், இந்த 2025ம் ஆண்டில் வெளியான திரைப்படம்தான் ஆபிசர் ஆன் டியூட்டி. இந்த படத்தில் நடிகர்கள் குஞ்சாக்கோ போபன், பிரியாமணி (Priyamani), ஜெகதீஸ் மற்றும் விஷாக் நாயர் உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்த படமானது போலீஸ் விசாரணையில் கிடைக்கும் மர்மங்கள் தொடர்பான ஒரு திரில்லர் (Thiriller) திரைப்படமாக விறுவிறுப்பான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. சுமார் ரூ 13 கோடி பட்ஜெட்டில் வெளியான இப்படம் திரையரங்குகளில் வெளியாகி சுமார் ரூ.54 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. மேலும் இந்த படமானது நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடியில் தமிழிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லோகா சாப்டர் 1 சந்திரா (Lokah Chapter 1: Chandra :
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) மற்றும் நஸ்லென் (Nazlen) கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக கதைக்களத்தில் வெளியாகியிருந்த படம்தான் லோகா. இந்த படத்தை இயக்குநர் டோமினிக் அருண் இயக்க, நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருந்தார். இந்த படமானது ஒரு ரத்த காட்டேரியின் கதையை மையமாக கொண்டு, மிகவும் வித்தியாசமாக ஒரு சூப்பர் ஹீரோ படம் போல அமைந்திருந்தது. இப்படம் கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.
இதையும் படிங்க: 2025ல் வெளியாகி ரசிகர்களிடையே ஹிட்டடித்த ரீ-ரிலீஸ் படங்கள்.. விஜய் படங்கள் மட்டுமே இத்தனையா?




கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றிருந்தது. மேலும் உலகளாவிய வசூலில் இப்படம் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் திரைப்படம் (Thuradum) :
நடிகர் மோகன்லால் (Mohanlal) மற்றும் ஷோபனாவின் (Shobana) கூட்டணியில் வெளியான படம்தான் தொடரும். இந்த படமானது ஒரு திரில்லர் கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர்கள் மேத்தீவ் தாமஸ் மற்றும் பிரகாஷ் வர்மா உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்தியிருந்தனர். இந்த படமானது கடந்த 2025 ஆண்டு ஏப்ரல் 25ம் தேதியில் வெளியாகியிருந்தது. இந்த படமானது ஒரு க்ரைம் திரில்லர் கதையை மையமாக கொண்டு வெளியாகியிருந்தது. இப்படமானது வெளியாகி உலகளவில் சுமார் ரூ 230 கோடிகளுக்கு மேல் வசூலித்து வெற்றிபெற்றிருந்தது. 2025ல் வெளியான மலையாள திரில்லர் படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கலம்காவல் திரைப்படம் (Kalamkaval):
நடிகர் மம்முட்டி (Mammootty) மற்றும் விநாயகனின் (Vinayagan) கூட்டணியில் வெளியான படம்தான் கலம் காவல். இந்த திரைப்படத்தை இயக்குநர் ஜித்தின் கே ஜோஸ் இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு சைக்கோ கொலையாளி தொடர்பான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இதில் நடிகர் மம்முட்டி தான வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஆக்ஷன் க்ரைம் திரில்லர் கதையில் வெளியான இப்படம் தற்போதுவரை சுமார் ரூ 85 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரேகா சித்திரம் திரைப்படம் (Rekhachithram) :
இயக்குநர் ஜோஃபின் டி. சாக்கோ (Jofin T. Chacko) இயக்கத்தில் இந்த 2025ம் ஆண்டில் வெளியாகி அனைவராலும் பேசப்பட்ட திரைப்படம்தான் ரேகா சித்திரம். இப்படம் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இப்படமானது ஒரு க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் வெளியாகியிருந்தது.
இதையும் படிங்க: 2025-ல் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சின்னத்திரை பிரபலங்கள் யார் யார்? – லிஸ்ட் இதோ!
இதில் நடிகர்கள் ஆசிஃப் அலி மற்றும் அனஸ்வரா ராஜன் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படமானது 2025ம் ஆண்டின் தொடக்கத்திலே பல பாராட்டுகளையும் பெற்றிருந்தது. இப்படம் 2025ல் வெளியான சிறந்த திரில்லர் படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.