Year Ender: 2025ல் ஓடிடியில் ரசிகர்களிடையே வரவேற்கப்பட்ட டாப் 5 தமிழ் படங்கள்.. முதலிடத்தில் இருப்பது எந்த படம் தெரியுமா?
Top 5 Best-Received Tamil OTT Films: தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டில் டாப் நடிகர்கள் முதல், சிறு நடிகர்கள் படங்கள் வரை பல வெளியாகியுள்ளது. அதில் 2025ம் ஆண்டில் ஓடிடியில் அதிகம் ரசிக்கப்பட்ட டாப் 5 தமிழ் படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
டிராகன் திரைப்படம் (Dragon) : நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) நடிப்பில் 2025ம் ஆண்டில் முதலில் வெளியான திரைப்படம் டிராகன். இந்த படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu), இயக்க, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்தார். அதிரடி ஆக்ஷ்ன், காமெடி, காதல் மற்றும் எமோஷனல் தொடர்பான கதைக்களத்தில் வெளியான இப்படம் மக்களிடையே சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது. கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம், சுமார் ரூ 120 கோடிகளுக்கு மேல வசூல் செய்து சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது. அதை தொடர்ந்து, கடந்த 2025 மார்ச் மாதத்தில் நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடியில் வெளியாகியிருந்தது. இந்த படமானது ஓடிடியில் வெளியாகியுள்ள தற்போதுவரை ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: 2025ல் திருமணம் செய்துகொண்ட தமிழ் பிரபலங்கள் யார் யார்?
குட் பேட் அக்லி திரைப்படம் (Good Bad Ugly) :
நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar)நடிப்பில் 1 ஆண்டுகளுக்கு பின் வெளியான திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படமானது அஜித் குமாருக்கு பிரம்மாண்ட ஹிட் கொடுத்த படமாக அமைந்திருந்தது. இப்படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இந்த அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் ரசிகர்களுக்காக படமான அமைந்திருந்தது. இப்படம் 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியாகி தியரையரங்குகளில் ரூ 240 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. அதன் பின் 2025ம் மே மாதத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியிருந்தது.இப்படமானது நெட்பிளிக்ஸிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் (Tourist family) :
அறிமுக இயக்குநரும், தற்போதிய நடிகருமான அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth) இயக்கத்தில் வெளியான முதல் படம்தான் டூரிஸ்ட் பேமிலி. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சசிகுமார் மற்றும் சிம்ரன் இனைந்த நடித்திருந்தனர். மேலும் இதில் முக்கிய வேடத்தில் கமலேஷ் மற்றும் யோகலட்சுமி போன்ற நடிகர்களும் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது கடந்த 2025 மே மாதத்தில் திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளிலும் பாசிடிவ் ரிவியூ பெற்ற இப்படம், கடந்த 2025 ஜூன் மாதத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. இந்த படமானது இதிலும் ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டிருந்தது.
குடும்பஸ்தன் திரைப்படம் (Kudumbasthan):
நடிகர் கே.மணிகண்டனின் (K. Manikandan)முன்னணி நடிப்பில் இந்த 2025ம் ஆண்டிலஜனவரி மாதத்தில் வெளியான படம்தான் குடும்பஸ்தன். இந்த படமானது ஒரு மிடில் கிளாஸ்
இளைஞனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இதை அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருந்தார். இதில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடிகை சாண்வே மேகனா நடித்திருந்தார். திரையரங்குகளில் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்ற இப்படம் 2025 மார்ச் 7ம் தேதியில் ஜீ5 ஓடிடியில் வெளியாகி மக்களிடையே வரவேற்கப்பட்டது.
மாரீசன் திரைப்படம் (Maareesan) :
மலையாள இயக்குநரான சுதீஷ் சங்கரின் இயக்கத்தில் தமிழில் முதல் படமாக அமைந்தது மாரீசன். இதில் நடிகர்கள் ஃபகத் ஃபாசில் (Fahad Fazil) மற்றும் வடிவேலு (Vadivelu)இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2025 ஜூலை 25ம் டெஹதியில் உலகமெங்கும் வெளியானது. இப்படம் மதியழகன் படம் போல ஒரு பீல் குட் திரைப்படமாக அமைந்திருந்தது.
இதையும் படிங்க: 2025-ம் ஆண்டில் பெற்றோர்களான பிரபலங்கள் யார் யார்? லிஸ்ட் இதோ
மேலும் எமோஷனல், காமெடி என இப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தின் ரிலிசோடு தமிழில் தலைவன் தலைவி படம் வெளியான நிலையில், இதற்கு பெருமளவு திரையரங்குகளில் வரவேற்பு இல்லை. ஆனால் ஓடிடியில் வெளியான பின் இப்படத்தை ரசிகர்கள் போற்றி புகழ்ந்தனர். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுவருகிறது.



