Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

TTT Movie: அரசியல் காமெடி கதையில்… வெளியானது ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ பட ட்ரெய்லர்!

TTT Movie Trailer: நடிகர் ஜீவாவின் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ள படம்தான் தலைவர் தம்பி தலைமையில். இந்த படத்தை மலையாள இயக்குநர் நிதிஷ் சத்யதேவ் இயக்கியிருந்த நிலையில், வரும் 2026 ஜனவரி 15ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை முன்னிட்டு தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

TTT Movie: அரசியல் காமெடி கதையில்… வெளியானது ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ பட ட்ரெய்லர்!
தலைவர் தம்பி தலைமையில் பட ட்ரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Jan 2026 20:06 PM IST

தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துவருபவர் ஜீவா (Jiiva). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் அகதியா (Agathya). இயக்குநர் பா.விஜய் (Pa. Vijay) இயக்கத்தில் ஜீவா நடித்த இப்படம் அவருக்கு அந்தளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை. இப்படத்தை அடுத்தாக தொடர்ந்து புது படங்களில் இணைந்திருந்தார். அந்த விதத்தில் பேமிலி (family) என்ற மலையாள திரைப்படத்தை இயக்கியிருந்த இயக்குநர் நிதிஷ் சத்யதேவ் (Nithish Sahadev) இயக்கத்தில், ஜீவா நடித்துள்ள படம்தான் “தலைவர் தம்பி தலைமையில்” (Thalaivar Thambi Thalaimaiyil). இப்படத்தை ரசிகர்கள் சுருக்கமாக TTT என அழைத்து வருகின்றனர். இப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகர்கள் ப்ரதாதனா நாதன், தம்பி ராமையா, அனுராஜ், இளவரசு உட்பட பல்வேறு பிரபலங்கள் இனைந்து நடித்துள்ளனர்.

இந்த படம் முதலில் 2026 ஜனவரி 30ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜன நாயகன் (Jana Nayagan) பட ரிலீஸ் ஒத்திவைப்பின் காரணமாக வரும் 2026 ஜனவரி 15ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் காமெடி கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்சார் சான்றிதழ் விவகாரம்… உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஜன நாயகன் படக்குழு

தலைவர் தம்பி தலைமையில் படத்தின் ட்ரெய்லர் பதிவை வெளியிட்ட படக்குழு:

இந்த படத்தை மலையாள இயக்குநர் நிதிஷ் சத்யதேவ் இயக்க, கண்ணன் ரவி க்ரூப்ஸ் மற்றும் ஜீவா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை உருவாகியுள்ளது. இப்படமானது முற்றிலும் அரசியல் கலந்த காமெடி கதையில் தயாராகியுள்ளது. ஒரு திருமண வீட்டின் மூலமாக தனது ஓட்டை எணிக்கை அதிகமாக்கும் மூலம் ஜீவா, அந்த திருமணத்தை நடத்திவைத்து, அந்த குடும்பத்தை வாக்கு உரிமையை பெற்றாரா? அல்லது இல்லையா? என்பதுதான் இப்படத்தின் மைய கரு.

இதையும் படிங்க: தமிழில் மட்டும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

இப்படமானது இந்த 2026 ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இது நல்ல வரவேற்பை பெற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் ஜன நாயகன் படம் வராத காரணத்தினாலே இதுபோன்று பல சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.