Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vaa Vaathiyaar: மீண்டும் மீண்டுமா? வா வாத்தியார் படத்தின் ரிலீஸிற்கு வந்த புது பிரச்சனை?

Vaa Vaathiyaar Crisis: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கார்த்தி. இவரின் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாக தயாராகியிருந்த படம்தான் வா வாத்தியார். இப்படத்தின் ரிலீஸ் பின் ஒத்தவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வெளியான புது ரிலீஸ் தேதிக்கும் பிரச்சனை வந்துள்ளது.

Vaa Vaathiyaar: மீண்டும் மீண்டுமா? வா வாத்தியார் படத்தின் ரிலீஸிற்கு வந்த புது பிரச்சனை?
Vaa Vaathiyaar Movie ProblemImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 11 Jan 2026 19:41 PM IST

நடிகர் கார்த்தியின் (Karthi) முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் கடந்த 2025ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் வெளியாக காத்திருந்த திரைப்படம்தான் வா வாத்தியார் (Vaa Vaathiyaar). இப்படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி (Nalan kumarasamy) இயக்க, ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா (Ganavel Raja) தயாரித்திருந்தார். இதில் கார்த்தி அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்துள்ளார். இப்படத்தின் மூலமாகத்தான் இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்த படமானது எம்.ஜி.ஆர். ரசிகர் (MGR Fan) ஒருவரின் மகனின் செயல்பாடுகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த படமாகும். இந்த படமானது ஆரம்பத்தில் 2025 டிசம்பர் 12ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ட்ரெய்லரும் வெளியாகியிருந்தது.

பின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடன் பிரச்சனையால் இப்படத்தின் ரிலீஸ் தடை செய்யப்பட்டிருந்தது. அந்த பிரச்சனையெல்லாம் முடிந்த நிலையில், இப்படம் 2026 ஜனவரி 14ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படத்திற்கு புது பிரச்சனை கிளம்பியுள்ளது.

இதையும் படிங்க: தனது புகைப்படம், பெயரை அனுமதியின்றி பயன்படுத்த தடை கோரி கமல்ஹாசன் வழக்கு!

வா வாத்தியார் படத்திற்கு வந்த புது பிரச்சனை என்ன :

கார்த்தியின் இந்த வா வாத்தியார் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரிலீஸை தடை செய்யவேண்டும் என கரூரை சேர்ந்த அசோசியேட்ஸ் நிறுவனம் ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாம். இந்த வழக்கு நாளை 2026 ஜனவரி 12ம் தேதியில், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி என்பவர் விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்டத்தட்ட 3 முறை மாற்றப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்படுமா? என கேள்வி எழும்பியுள்ளது.

இதையும் படிங்க: தளபதி விஜய் முதல் சிலம்பரசன் வரை.. டாப் 5 நடிகர்களின் 25வது படம் என்னனு தெரியுமா?

சென்னை உயர்நீதிமன்றம் வரும் 2026 ஜனவரி 12ம் தேதியை அடுத்தாக தொடர்ந்து பொங்கல் விடுமுறை 18ம் தேதிக்கு பின்னரே கோர்ட் திறக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த விசாரணைக்கு 2026 ஜனவரி 12ம் தேதியில் தீர்ப்பு வந்தால் மட்டுமே சொன்ன தேதியில் வெளியாகும், இல்லையென்றால் பொங்கல் விடுமுறையை அடுத்தக்கதான் தீர்ப்பு வரும் என கூறப்படுகிறது.

வா வாத்தியார் பட புது பிரச்சனை குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு :

இந்த வா வாத்தியார் படத்திற்கு ஏற்கனவே எதிர்பார்ப்புகள் அதிகரித்துவந்த நிலையில், தற்போது மீண்டும் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுமா? என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இன்னும் இது குறித்து படக்குழு எந்தவித அறிவிப்புகளையும், ஒத்திவைப்பது குறித்தும் தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.