Sai Pallavi: கலைமாமணி விருது குறித்து சாய் பல்லவி சொன்ன விஷயம்.. என்ன தெரியுமா?
Sai Pallavi Instagram Post: தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் சாய் பல்லவி. இவருக்கு தமிழக அரசின் சார்பில் சமீபத்தில் கலைமாமணி விருது வழங்கப்பட்டிருந்தது. அது குறித்து விளக்கம் கொடுத்து நெகிழ்ச்சி பதிவை இவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
தென்னிந்திய கதாநாயகியாக நடித்துவந்த, தற்போது பான் இந்திய வலம்வருபவர் சாய் பல்லவி (Sai Pallavi). இவரின் நடிப்பில், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் இவருக்கு இன்ஹி அறிமுக திரைப்படமாக உருவாகிவருவது ராமாயணம் (Ramayanam). இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி சீதை வேடத்தில் நடித்தவருகிறார். இப்படத்தின் முதல் பாகத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், பார்ட் 2விற்கான ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்ததாக, பாலிவுட்டில் ஆமிர்கானின் (Aamir Khan)மகனுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் இவர் நடித்துவருகிறார் என கூறப்படுகிறது. தமிழ் சினிமாவை தொடர்ந்து இவரின் புகழ் தற்போது பான் இந்தியாவரைப் பரவியுள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற கலைமாமணி விருதுவழங்கும் விழாவில், நடிகை சாய் பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான கலைமாமணி விருது (Kalaimamani Award) கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது நிறைவடைந்து கிட்டத்தட்ட 1 மாதங்களுக்கும் மேலான நிலையில், இதுகுறித்து தற்போது சாய் பல்லவி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வரலகைவருகிறது.




இதையும் படிங்க: ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தை இயக்கும் நடிகர் தனுஷ்? இது புது ட்விஸ்ட்டா இருக்கே
கலைமாமணி விருது வாங்கியது குறித்து நடிகை சாய் பல்லவில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
இந்த பதிவில் நடிகை சாய் பல்லவி, ” இந்த கலைமாமணி என்ற வார்த்தையை நான் வளர்ந்துவரும் காலத்திலிருந்தே கேட்டுவருகிறேன். அந்த கவுரவம் தற்போது எனக்கு கிடைத்திருப்பது என்பது மிகவும் யதார்தமானதுதான். இப்படிப்பட்ட மகத்தான கௌரவத்திற்கு, தமிழ்நாடு அரசிற்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் இயல் இசை நாடகம் மன்றத்தினர், ஆகியோருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதையும் படிங்க: இன்னும் முடியாத ஷூட்டிங்.. கார்த்தியின் வா வாத்தியார் பட ரிலீஸ் தள்ளிபோகிறதா?
மேலும் இப்படிப்பட்ட விலைமதிப்பற்ற பதிவை நான் வெளியிட ஒரு மாதமாகிவிட்டது. இதன் மூலமாகத்தான் எனது அன்புக்குரியவர்களான தாத்தா மற்றும் பாட்டியுடன் புகைப்படங்களை எடுக்கமுடிந்தது” என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை சாய் பல்லவியின் கைவசம் உள்ள படங்கள் :
நடிகை சாய் பல்லவி தற்போது பாலிவுட் படங்களில் பிசியாக இருக்கிறார். அவர் ஆமிர்கானின் மகன், ஜுனைத் கானின் நடிப்பில் மேரே ரஹோ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இதை அடுத்ததாக ரன்பீர் கபூருடன் ராமாயணம் பார்ட் 1 மற்றும் பார்ட் 2 படத்திலும் நடித்துவருகிறார். மேலும் இவர் தமிழில் சிலம்பரசனின் அரசன் படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.