RJ Balaji: அவருடைய கண்களே பல விஷயங்களை சொல்லும் – சூர்யா குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!
RJ Balaji About Karuppu Movie: தென்னிந்திய சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் முதலில் வெளியாக தயாராகியுள்ள திரைப்படம் கருப்பு. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், அதில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி கருப்பு திரைப்படம் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் 2026ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் திரைப்படங்களில் ஒன்றுதான் கருப்பு (Karuppu). இதில் நடிகர் சூர்யா (Suriya) லீட் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்திருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டுவருகிறது. இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்க, ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. மேலும் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இதுவரை 3 படங்கள் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
மேலும் கடந்த 2026 ஏப்ரல் 26ம் தேதியில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, கருப்பு திரைப்படத்தின் முதல் பாதி, இரண்டாம் பாதி எவ்வாறு வந்துள்ளது என்பது குறித்து தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: ஜோதிகாவிடம் அனுமதி வாங்கியும், வாங்காமலும் நடித்த காட்சிதான் அது – சூர்யா பகிர்ந்த விஷயம்!
கருப்பு திரைப்படம் எவ்வாறு வந்துள்ளது என்பது குறித்து ஆர்.ஜே.பாலாஜி சொன்ன விஷயம்:
அந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, “கருப்பு படத்தின் முதல் பாதி வணிக ரீதியாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் அதிரடியான காட்சிகள் உள்ளனது. மேலும் ஒரு கிங் தனது அரியணைக்கு வருவது போன்ற காட்சிகள் உள்ளது. சாதாரணமாக ஒரு பெரிய ஹீரோ ஒவ்வொரு காட்சியிலும் இருப்பார், ஆனால் இந்தப் படத்தில் அவர் இல்லாத பல காட்சிகள் உள்ளன.
இதையும் படிங்க: மக்களே ரெடியா?… முடிவடைந்தது டிசி படத்தின் ஷூட்டிங் – கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
மேலும் படத்திற்குள் வெவ்வேறு கதைகள் உள்ளன. சூர்யா திரையில் தன்னைத்தானே ரசித்து, ஜாலியாக இருக்க வேண்டும், அதே சமயம், மக்களைக் கவரும் வகையிலும் திரையில் தோன்ற வேண்டும் என்று நான் விரும்பினேன். அவருடைய கண்களே பல விஷயங்களைச் சொல்லும்” என அவர் பேசியிருந்தார்.
கருப்பு திரைப்படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேசியது தொடர்பான எக்ஸ் பதிவு:
#Karuppu is a commercial 1st half with a high 🔥 every 10 mins in the 2nd half. A king 👑 coming for his throne. Usually, a big hero is in every scene, but in this movie there are many scenes without him, with different stories within the film. I wanted #Suriya to enjoy himself… pic.twitter.com/L2bSgHWdmX
— Movies Singapore (@MoviesSingapore) April 26, 2026
கருப்பு திரைப்படமானது வரும் 2026ம் ஆண்டு மே 14ம் தேதியில் வெளியாகவுள்ளது. மேலும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்த போஸ்டரில் தேதி குறிப்பிடாமல் வெளியிட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதி தள்ளிபோகிறதா? என அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் கிடைக்கும்வரை, படங்களின் ரிலீஸ் தேதியை குறிப்பிடக்கூடாது என கூறப்பட்ட கிரணத்தால் மட்டுமே, போஸ்டரில் குறிப்பிடவில்லை என ஆர்.ஜே.பாலாஜி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.