AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரபல மலையாள நடிகரின் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளாரா அஜித் குமார்? வைரலாகும் தகவல்

Malayalam Movie Drishyam 3 Cameo Update: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியகா உள்ள த்ரிஷ்யம் 3 படத்தில் நடிகர் அஜித் குமார் கேமியோ வேடத்தில் நடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரபல மலையாள நடிகரின் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளாரா அஜித் குமார்? வைரலாகும் தகவல்
அஜித் குமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Apr 2026 14:42 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டுமே படங்களில் நடித்து வரும் நடிகர் அஜித் குமார் தனது கார் ரேஸிங்கிலும் அதிக அளவில் கவனத்தை செலுத்தி வருகிறார். அதன்படி நடிகர் அஜித் குமார் படங்களில் நடிப்பது மற்றும் கார் ரேஸிங் என இரண்டிலும் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பெல்ஜியத்தில் நடைப்பெற்ற கார் ரேஸிங் போட்டியில் இந்தியா சார்பாக நடிகர் அஜித் குமாரின் குழு கலந்துகொண்டு போட்டியிட்டது. அதில் இரண்டாவது பரிசையும் தட்டி தூக்கியதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் அஜித் குமார் அடுத்ததாக 64-வது படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள நிலையில் அந்தப் படத்தின் ப்ரீ புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் நடைப்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் பிரபல மலையாள நடிகரின் படத்தில் கேமியோ வேடத்தில் நடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மலையாள நடிகரின் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளாரா அஜித்?

இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டுமே நாயகனாக நடித்து வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் மற்ற்ப் மொழி படங்களில் நடிப்பது இல்லை. இந்த நிலையில் முன்னதாக இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில் கேமியோ வேடத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் மலையாள சினிமாவில் தனது நண்பராக இருக்கும் நடிகர் மோகன்லாலின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள த்ரிஷ்யம் 3 படத்தில் கேமியோ வேடத்தில் நடித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்தப் படம் மே மாதம் 21-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் நாளை 29-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… Rishabh Shetty: யூத் பட வெற்றி… கென் கருணாஸை நேரில் அழைத்து பாராட்டிய ரிஷப் ஷெட்டி..!

மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… RJ Balaji: அவருடைய கண்களே பல விஷயங்களை சொல்லும் – சூர்யா குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!

Follow Us